PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாவரங்களின் சுவாசம்
மற்ற உயிர்கள் போலத் தாவரங்கள் வளரவும் உயிர் வாழவும் சுவாசிக்கவும் ஆக்ஸிஜன் தேவை. தாவரங்கள், விலங்கினங்கள் போலவே சுவாசித்தலின் போது ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியே விடுகின்றன.
Important!
தாவரங்கள் தாம் சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனை விட ஒளிச்சேர்க்கையில் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன.
தாவரங்களின் வாயு பரிமாற்றம் அதன் இலைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நடை பெறும். அவை இலைத்துளைகள் (ஸ்டொமட்டா) எனப்படும்.
ஒளிச்சேர்க்கை
- தாவரங்கள் அவற்றின் உணவைத் தானே உருவாக்க ஒளிச்சேர்க்கையைப் பயன்படுத்துகின்றன.
- அப்போது காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைட், சூரிய ஒளி, நீர் இவற்றின் உதவியுடன் உணவை உற்பத்தி செய்கின்றன.
- இதில் பச்சையம் என்னும் நிறமியும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
- ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியை உறிஞ்ச இதுப் பயன்படுகிறது.
ஒளிச்சேர்க்கையின் சமன்பாடு பின்வருமாறு,
விலங்குகளின் சுவாசம்
காற்றில் \(21\)% ஆக்ஸிஜன் உள்ளது. அது அனைத்து உயிர்களும் வாழ மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
சுவாசித்தலின் போது ஆக்ஸிஜன் வாயு உண்டு செரிக்கப்பட்ட உணவுடன் வினை புரிகிறது. இந்த வேதி வினைக் காரணமாக நீராவி, கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் ஆற்றல் உருவாகும். அந்த கார்பன்-டை-ஆக்ஸைட் இரத்தத்தில் கலந்து நுரையீரல் மூலம் வெளியேற்றப்படும். இதுவே "சுவாசம் " எனப்படும்.
இந்த ஆற்றல் உடலின் பல செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.
Example:
இயக்கம், வளர்ச்சி, வளர்சிதை மாற்றம்
இதன் சமன்பாடு பின்வருமாறு,
சுவாசித்தல் அட்டவணை
நாம் சுவாசிக்கும் போது நைட்ரஜனின் அளவில் எந்த மாறுதலும் இருக்காது, ஆனால், உள்ளே இழுக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அதிகம் இருக்கும். வெளியே விடும் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைட் அதிகம் இருக்கும்.
சுவாசித்தலில் காற்றின் இயல்பு
நீரில் தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசம்
குளம், ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் ஒருக் குறிப்பிட்ட அளவு கரைந்து இருக்கும். அவையே நீர் வாழ்த் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிக்க உதவுகின்றன.
Example:
தவளைகள் - தோல் வழியாக சுவாசிக்கும், மீன்கள் - செதில்கள் மூலம் சுவாசிக்கும்.
உலர்ப் பனிக்கட்டிகள்
கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை \(-57°\) குளிர்வித்தால் நேரிடையாக அது திட நிலைக்கு மாறும். இதுவே உலர்ப் பனிக்கட்டி ஆகும். இது சிறந்த குளிர்விப்பான் ஆகும். இறைச்சி, மீன்கள் போன்றவைகளை நீண்ட தூரம் அனுப்பும்போது அவற்றைப் பதப்படுத்த உலர்ப் பனிக்கட்டிகள் பெரிதும் உதவுகின்றன.