PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்றில் உள்ள வாயுக்கள் குறித்து உறுதிப்படுத்தும் சோதனை பின்வருமாறு, \(18\)ம் நூற்றாண்டு வரை மக்கள் காற்றினை/ ஒரு பருப்பொருள் துகள் என்றே நினைத்தனர்.
ஜோசப் பிரிஸ்ட்லி  \(1774\)ம் ஆண்டு ஒரு சோதனையின் மூலம் "காற்று என்பது பல வாயுக்களால் ஆன ஒரு கலவை. அது ஒரு அடிப்படை பருப்பொருள் அல்ல" என்பதை கண்டுபிடித்தார்.
பிரிஸ்ட்லி சோதனை
  • நீர் நிரப்பிய ஒருத் தொட்டியில் ஒரு மிதவையை வைக்க வேண்டும். 
  • பின் அதில் ஒரு மெழுகுவர்த்தியை வைக்க வேண்டும்.
  • அதனை ஒரு ஜாடிக் கொண்டு முற்றிலுமாக மூடினார். அடிப்பகுதியில் நீர் இருந்தமையால் காற்று உள்ளேயோ வெளியேவோ புக முடியாது.
shutterstock686698336.jpg
மெழுகுவர்த்தி மூடப்படுகிறது
  • சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி அணைந்து விட்டது.
  • ஒரு பூதக்கண்ணாடியை வைத்து அதனுள் சூரிய ஒளிக் கற்றைகளைக் கொண்டு மீண்டும் ஒளியேற்ற முயன்றார். ஆனால், இயலவில்லை.
shutterstock686698342.jpg
மெழுகுவர்த்தி அணைந்து விடுகிறது
  • இதில் இருந்து நாம் காற்றில் ஏதோ ஒரு பொருள் எரிதலுக்கு உதவி புரிந்து இருக்கிறது என அறியலாம்.
  • எரிய துணை செய்யும் அந்தப் பொருள் முழுமையாக வேறு ஒரு பொருளாக மாறும் வரையில் மெழுகுவர்த்தி எரிந்தது.
  • அவர் கண்டுபிடித்த நிறம் இல்லாத அதிக செயல் திறன் கொண்ட வாயுவிற்கு ஆண்டனி லவாய்சியர் என்னும் பிரெஞ்சு வேதியியலாளர் ‘ஆக்சிஜன்’ என்று பெயர் சூட்டினார்.