PDF chapter test TRY NOW
சோதனை 2: உயிருள்ள எலி சோதனை
- முந்தைய சோதனையில் உள்ளே இருந்த ஆக்ஸிஜன் வாயு கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவாக மாற்றப்படுகிறது.
- வெளிக்காற்று நுழையாதவாறு உயிர் உள்ள எலி ஒன்று உள்ளே வைக்கப்பட்டது.
எலி உள்ளே வைக்கப்படுகிறது
- ஆனால் சுவாசிக்க காற்று இல்லாததால் அது இறந்து விட்டது.
- இதன் மூலம் பிரிஸ்ட்லி உயிர்கள் வாழ சுவாசிக்க ஆக்ஸிஜன் தேவை என நிரூபணம் செய்தார்.
சோதனை 3: புதினாச் செடி சோதனை
- பிரிஸ்ட்லி இப்போது ஜாடியைத் தூக்கி மீண்டும் ஆக்ஸிஜன் நிரப்பி உள்ளே ஒரு புதினாச் செடியை வைத்தார்.
புதினாச் செடி உள்ளே வைக்கப்படுகிறது
- நீரில் நுழைத்து வைக்கப்பட்டச் செடி வாடவில்லை. மேலும் மீண்டும் மெழுகுவர்த்தியை ஏற்ற முடிந்தது. சுடர் அணையாமல் எரிந்தது.
புதினாச் செடி மற்றும் மெழுகுவர்த்தி பாட்டிலில்
சோதனை 4: தாவர-விலங்கு பிணைப்பு
- பிரிஸ்ட்லி இப்போது ஜாடியைத் தூக்கி மீண்டும் ஆக்ஸிஜன் நிரப்பி உள்ளே எலி மற்றும் புதினாச் செடி இரண்டையும் உள்ளே வைத்தார்.
- எலி மற்றும் புதினாச் செடி இரண்டுமே உயிர்ப்புடன் இருந்தது.
எலி மற்றும் புதினாச் செடி உள்ள பாட்டில்
- தாவரம் மற்றும் விலங்கு இரண்டு உயிர்களுக்கும் இணக்கமான உறவு ஏற்பட்டதால் இரண்டும் உயிர் வாழ்ந்தன.
- எனில், சுண்டெலி ஆக்சிஜனை உள்ளே இழுத்து வெளியிட்ட கார்பன் டை ஆக்ஸைடினை வெளியிட்டது. அந்த கார்பன் டை ஆக்ஸைட் வாயுவை உள்ளே இழுத்து புதினாச் செடி ஆக்சிஜனாக மாற்றி விடுகிறது. இதுவே காரணம் ஆகும்.
ஜான் இன்ஜென்ஹவுஸ் என்பவர் (\(1730\)-\(1799\) வரை) பசும் தாவரங்களின் உணவு உற்பத்தி செயலான ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவை என்று நிரூபணம் செய்தார். மேலும், நாம் முன் கண்ட சோதனைகளின்படி வெளியிடப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவினை ஒளிச்சேர்க்கை மூலம் தாவரம் ஆக்சிஜனை வெளியிடுகிறது எனவும் நிரூபணம் செய்தார். இதன் மூலம் காற்று என்பது ஒரு கலவை. அதில் பல வாயுக்கள் கலந்து உள்ளன என்பது தெளிவாகிறது.