PDF chapter test TRY NOW
நம்மைச்சுற்றி எங்கும் நிறைந்து உள்ள காற்றினை நம்மால் பல வழிகளில் உணர மட்டுமே இயலும். உதாரணமாக கொடியில் அசையும் துணிகள், மின்விசிறியால் அசையும் புத்தக தாள், மரங்களில் ஏற்படும் சலசலப்பு, வானில் பறக்கும் பட்டம் இவை போன்ற தருணங்களில் நாம் காற்று இருப்பதை அறிந்து கொள்ளலாம். வேறு எந்த வழியிலும் காற்றினை அறிய இயலாது. தொடுதல், சுவைத்தல், பார்த்தல் என எவ்வழியிலும் அறிய இயலாது.
பட்டம் பறத்தல்
கொடியில் அசையும் துணிகள்
உணவு இல்லாமலோ நீர் இல்லாமலோ சில நாட்கள் வாழ இயலும். ஆனால் காற்று இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ இயலாது.
சில நேரங்களில் காற்று மெல்லிய விசையுடன் குளிர்ச்சியாக வீசினால் தென்றல் ஆகும். காற்று விசை அதிகமாக வீசினால் அது மரங்களை வேருடன் பிடுங்கியும், வீட்டுக்கூரையை பிரித்து எறியும் அளவுக்கு இருந்தால் அது சூறாவளி அல்லது புயல் எனப்படும்.
புயல்
காற்று திசைகாட்டி
காற்று திசைகாட்டி
குறிப்பிட்ட இடத்தில் காற்றின் திசை அறிய காற்று திசைகாட்டி பயன்படுகிறது. மனிதர்கள் சுவாசிக்க மற்றும் எதையேனும் எரிக்க காற்று மிகவும் முக்கியம்.