PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகாற்றின் தன்மைகளை பின்வருமாறு அறியலாம்,
- இடத்தை ஆக்கிரமிக்கும்.
- நிறம் கிடையாது.
- கண்ணுக்குத் தெரியாது.
- தண்ணீரில் கரையும் தன்மைக் கொண்டது.
- சுவையற்றது.
- மணமற்றது.
- காற்றினை அழுத்தத்திற்கு உட்படுத்த முடியும்.
செயல்பாடு 1: காலி பாட்டில் சோதனை
- ஒரு காலி கண்ணாடி பாட்டிலில் வெறும் கண்ணால் காணும்போது எதுவும் கண்ணுக்குத் தெரியாது. உள்ளே எதுவும் இல்லை என்றே நினைப்போம்.
- ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி பாட்டிலின் வாய்ப்பகுதியை உள்ளே அழுத்தவும்.
- பாட்டிலின் உள்ளே நீர் போகாது.
- அதையே பாட்டிலை லேசாக சாய்த்து வைத்தால் அப்போது நீர் உள்ளே போகும்.
- மேலும் காற்று குமிழிகள் வெளியேறும்.
- பாட்டில் காலியாக இல்லை. உள்ளே காற்று உள்ளதால் தான் அதை தலைகீழாக தண்ணீரில் அமிழ்த்தியபொழுது உள்ளே நீர் போகவில்லை.
- அதனை சாய்த்து பொழுது காற்று வெளியேறி உள்ளே நீர் புகுந்தது.
காலி பாட்டில் காற்று சோதனை
விளைவு
- காற்று குமிழிகள் வெளியேறுவதன் மூலம் நாம் பாட்டிலில் காற்று இருந்ததை அறிய இயலும்.
- காற்று வெற்றிடத்தை அடைத்துக் கொள்வதால் நம்மைச்சுற்றி எங்கும் காற்று உள்ளது என அறியலாம்.