PDF chapter test TRY NOW

நைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தவர் டேனியல் ரூதர்ஃபோர்டு என்னும் வேதியியலாளர். அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பின்வருமாறு நைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தார்.
  1. ஒரு ஜாடியில் எரியும் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவாக மாற்றினார்.
  2. பின் அந்த காற்றினை சுண்ணாம்பு நீரின் உள்ளே செலுத்தி கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை முற்றிலுமாக நீக்கினார்.
  3. அதில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு துளியளவும் இல்லை என உறுதி செய்த பின்னர்,
  4. அது மெழுகுவர்த்தி எரிய எவ்வித துணையும் புரியவில்லை.
  5. உள்ளே தாவரம் வாழவும் ஏதுவாக இல்லை.
shutterstock686698336.jpg
நைட்ரஜன் வாயுவைக் கண்டறிதல்
அது நைட்ரேட்டிலிருந்து பெறப்பட்டதால் அதற்கு "நைட்ரஜன்" எனப் பெயர் சூட்டினார்.
காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைட் உள்ளதா எனக் கண்டறியும் சோதனை:
  1. ஒரு கண்ணாடி குவளையில் சுண்ணாம்பு நீரை எடுத்துக் கொள்ளவும்.
  2. அதனை உறிஞ்சுக் குழாய் மூலம் உள்ளே காற்று போகுமாறு ஊதவும்.
  3. உள்ளே வெண்ணிறப் படிமம் உருவாகி பின்னர் பால் போல மாறும்.
  4. இதன் மூலம் அதில் கார்பன்-டை-ஆக்ஸைட் உள்ளது என அறியலாம்.
shutterstock688171486.jpg
பால் போல மாறியுள்ள சுண்ணாம்பு நீர்