PDF chapter test TRY NOW
காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களின் இயைபைக் காட்டும் சோதனை.
இரும்புத் துகளானது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் இணையும்போது இரும்பு ஆக்ஸைடாக மாறித் துரு உருவாகிறது.
துருப்பிடித்தல்
இதனை நாம் ஒரு அளவீடாகக் கொண்டு காற்றில் உள்ளத் துருவின் அளவைக் கணக்கீடு செய்ய இயலும்.
- \(20\) மி.லி அளவுள்ள சோதனைக் குழாயினுள் ஒரு மெல்லிய அளவுள்ள இரும்பு கம்பிச்சுருளை சுருட்டி உள்ளே வைக்கவும்.
- குழாயினுள் நீரை ஊற்றவும். அதிக நீரை வெளியேற்றவும்.
- பின் ஒரு \(500\) மி.லி பீக்கரில் பாதி அளவு நீரை ஊற்றி நிரப்பவும். உள்ளே சோதனைக் குழாயைக் கவிழ்த்தி சாய்மானமாக வைக்கவும்.
- இதனை ஒரு வாரம் அப்படியே வைக்கவும்.
துருப்பிடித்தல் அளவிடுதல்
விளைவு
- சோதனைக் குழாயில் தண்ணீரின் அளவு உயர்ந்து இருக்கும்.
- துருப் பிடித்தல் காரணமாக காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டதால் நீரின் அளவு உயர்ந்து இருக்கும்.
- அதாவது எந்த அளவு துருவின் அளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு குழாய்க்கு வெளியே உள்ள நீர் உள்ளே வந்திருக்கும்.
- இது தோராயமாக \(20\)% இருக்கும்.