PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉடலில் பல்வேறு செயல்களை நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஒழுங்குபடுத்தி, நம் உடலின் உட்புற சூழலைப் பாதுகாக்கிறது. உடலில் பல நாளமில்லாச் சுரப்பிகள் அமைந்துள்ளன. இச்சுரப்பிகள் ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
நாளமில்லா சுரப்பிகள்
- பிட்யூட்டரி சுரப்பி - மூளையின் அடிப்பகுதி
- பீனியல் சுரப்பி - மூளையின் அடிப்பகுதி
- தைராய்டு சுரப்பி - கழுத்து
- தைமஸ் சுரப்பி - மார்புக்கூடு
- கணையம் - வயிற்றின் அடிப்பகுதி
- அட்ரினல் சுரப்பி - சிறு நீரகத்தின் மேல்
- இனப்பெருக்க உறுப்புகள் - இடுப்புக் குழி
நாளமில்லாச் சுரப்பிகள்
கழிவு நீக்க மண்டலம்
நமது உடலிலிருந்து, நைட்ரஜன் கலந்த கழிவுகள், கழிவுநீக்க மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகின்றது. இவற்றை நான்கு கழிவு நீக்க மண்டல பகுதிகளாக பிரிக்கலாம். அவை
- சிறுநீரகங்கள்
- சிறுநீர்நாளங்கள்
- சிறுநீர்ப்பை
- சிறுநீர்ப் புறவழி (யூரித்ரா)
சிறுநீரகம்