PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசிறுநீரகத்தின் பணிகள்
- சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ளன.
- நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகுகளாகும். இவை இரத்தத்தினை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன.
- சிறுநீரகத்தமனி ஆக்சிஜன் மற்றும் யூரியா உள்ள இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்கிறது.
- சிறுநீரகச்சிரை வடிகட்டப்பட்ட இரத்தத்தினை சிறுநீரகத்திலிருந்து கீழ் பெருஞ்சிரைக்கு கொண்டு செல்கிறது.
- சிறுநீர்க் குழாய் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்கிறது.
- சிறுநீர்ப்பை விரிவடையக்கூடிய தசையினாலான சிறுநீரானது உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, இப்பையில் தற்காலிகமாக சேமித்து வைத்திருக்கிறது.
- சிறுநீர்ப் புறவழி தசைகளால் சூழப்பட்ட குழல் போன்ற அமைப்பாகும். இதன் மூலம் சிறுநீரானது உடம்பிலிருந்து வெளியேற்றப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நாம் ஏன் நீரை அருந்துகிறோம்?
மனிதனின் உடலில் 70% நீர் உள்ளது. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (85%) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்த அளவு (15%) நீர் மட்டுமே உள்ளது. நாம் உணவின் மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு நாளைக்கு 1.5 முதல் 3.5 லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்.