PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செரிமான மண்டலத்தில் உணவுக் குழாய் மற்றும் அதனுடன் இணைந்த செரிமானச் சுரப்பிகளும் உள்ளன. இம்மண்டலமானது சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றும் மற்றும் செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.
 
உணவுக்குழாயுடன் சேர்ந்த செரிமான சுரப்பிகளாக உமிழ் நீர் சுரப்பி, கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை உள்ளன. இவை செரிமானப் பாதையில் உணவுச் செரிமானம் நடைபெறுவதற்கு உதவியாக செரிமான நொதிகளைச் சுரக்கிறது.
 
உணவுக் குழாய் சுமார்  \(9\) மீட்டர் நீளமுடைய தசையாலான நீண்ட குழல் ஆகும். இரைப்பை செரிமானத்தின் முதன்மையான உறுப்பாக உள்ளது. சிறுகுடலில் உட்கிரகித்தல் (உறிஞ்சும்) நடைபெறுகிறது.
 
Human organ system (TN 6th SK).png
செரிமான மண்டலம்
  
உணவுப் பாதையின் பாகங்கள்:
  1. வாய்
  2. வாய்க்குழி
  3. தொண்டை
  4. உணவுக் குழல்
  5. இரைப்பை 
  6. சிறுகுடல்
  7. பெருங்குடல்
  8. மல வாய்
செரிமான சுரப்பிகள்:
  1. உமிழ் நீர் சுரப்பிகள்
  2. இரைப்பை சுரப்பிகள்
  3. கல்லீரல்
  4. கணையம்
  5. குடல் சுரப்பிகள்
செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள்:
வாய்
  • வாயினுள் உணவு நுழைந்தவுடன் பற்கள், நாக்கு மற்றும் உமிழ்நீர் உதவியுடன் செரிமானம் துவங்குகிறது.
உமிழ் நீர் சுரப்பிகள்
  • உமிழ் நீரானது உலர்ந்த உணவை ஈரப்பதம் உடைத்தாக மாற்றி அதை எளிதில் விழுங்க முடிகிறது.
  • மேலும், உமிழ் நீரில் ஸ்டார்ச்சினை கரைக்கக்கூடிய அமைலேஸ் நொதியும், பாக்டீரியாக்களை கொன்று சிதைக்கக்கூடிய காரணிகளும் உள்ளது.
கல்லீரல்
  • இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப்பொருள்கள், சிறுகுடலிலிருந்து கல்லீரல் வழியாகச் செல்கின்றன.
  • இங்கு வடிகட்டப்பட்டு மற்றும் உடைக்கப்பட்டு புரதங்களாக உற்பத்தியாகின்றன.
  • மாவு பொருள்கள் குளுக்கோஸ் மற்றும் கிளைகோஜன் ஆக மாற்றப்பட்டு சேமித்து வைக்கிறது. மேலும், பித்த நீரை உற்பத்தி செய்கிறது.
இரைப்பை
  • உணவை சேமித்து வைக்கும், செரிக்கும் இடமாகவும் உள்ளன.
  • இரைப்பை நீரானது கோழை, நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
சிறுகுடல்
  • சுமார் \(6\) மீட்டர் நீளமுள்ள குழல் ஆகும். பெரும்பகுதி வேதிய செரிமானம் இதில் நடைபெறும்.
  • செரித்தப் பொருள்கள் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.
பெருங்குடல்
  • இதில், சிறுகுடலினால் செரிமானம் ஆகாத உணவு கழிவுகளிலிருந்து நீர் உறிஞ்சப்படுகிறது.
  • மேலும் பெருங்குடலில் அதிக அளவில் வாழும் பாக்டீரியாக்களினால் உருவாக்கப்படும். சில முக்கிய வைட்டமின்களும் இங்கு உறிஞ்சப்படுகிறது.