PDF chapter test TRY NOW
எலும்புத் தசைகள்
இவ்வகைத் தசைகள் நமது உடலில் உள்ள எலும்புகளுடன் சேர்ந்து செயல்படும். இவை நம் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பவை. இவ்வாறு, விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால், இவற்றை இயங்குத் தசைகள் எனப்படும்.

மென்தசைகள்
மென்தசைகள் உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புக்களின் சுவர்களில் காணப்படும். இவை நமது விருப்பத்திற்கேற்பச் செயல்படாதவை. எனவே, இவை கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகிறது.

இதயத் தசைகள்
இதயத்தின் சுவர் இதயத் தசைகளால் ஆனது. இவை, சீராகவும், தொடர்ச்சியாகவும் இதயத்தைத் துடிக்க வைக்கின்றன. இவையும் நமது விருப்பத்திற்கேற்ப கட்டுப்படாத இயங்கு தசைகள் ஆகும்.
