PDF chapter test TRY NOW
அறிமுகம்
உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும்.
உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால், ஒருங்கிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறை ஓர் உயிரினத்தின் பல பணிகளைத் திறனுடன் செயல்படுத்த உதவுகிறது.
நமது உடலில் எட்டு முக்கிய உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை
- எலும்பு மண்டலம்
- தசை மண்டலம்
- செரிமான மண்டலம்
- சுவாச மண்டலம்
- இரத்த ஓட்ட மண்டலம்
- நரம்பு மண்டலம்
- நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
- கழிவு நீக்க மண்டலம்
உறுப்பு மண்டலங்கள்
மனித உடலின் உறுப்பு மண்டலங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றி இப்பாடத்தில் மேலும் காண இருக்கின்றோம்.