PDF chapter test TRY NOW
எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுகளால் எலும்பு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. தசைகள் சேர்க்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் காணப்படுகின்றன.
Example:
நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற பணிகளைச் செய்வதற்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
சில குருத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவைற்றையும் எலும்பு மண்டலம் கொண்டுள்ளது. இணைப்பு இழைகள் எலும்புகளை எலும்புகளுடன் சேர்க்கின்றன. தசைநார்கள் எலும்புகளை தசைகளுடன் சேர்க்கின்றன.
Important!
மனிதனின் எலும்பு மண்டலத்தில் \(206\) எலும்புகள் உள்ளன.

எலும்பு மண்டலம்
எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளை உடையது. அவை
- அச்சுச் சட்டகம்
- இணையுறுப்புச் சட்டகம்
அச்சுச்சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறது. அவை
- மண்டையோடு
- முதுகெலும்புத் தொடர் (முதுகெலும்பு)
- விலா எலும்புக் கூடு
இணையுறுப்புச் சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மண்டையோடு

மண்டையோட்டின் பகுதிகள்
மண்டை ஓட்டில் மண்டை ஓட்டு எலும்புகள் மற்றும் முக எலும்புகள் உள்ளன. இவை மூளை மற்றும் முகத்தின் உள்ளமைப்பைப் பாதுகாக்க உதவுகிறது. வாய்க்குழியின் அடித்தளத்தில் உள்ள ஹயாய்டு எலும்பு மற்றும் செவிச் சிற்றெலும்புகளான சுத்தி எலும்பு, பட்டடை எலும்பு, அங்கவடி எலும்புகளும் மண்டையோட்டில் அடங்கும்.
Important!
முகத்திலேயே கீழ்த்தாடை எலும்பு தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.
முதுகெலும்புத் தொடர்

தண்டுவடத்தின் பகுதிகள்
முதுகெலும்புத் தொடர் மண்டையோட்டின் கீழ் புறத்திலிருந்து தொடங்குகிறது. இது, தண்டுவடத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது சிறிய முள்ளெலும்புத் தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
விலா எலும்புக் கூடு
விலா எலும்புக் கூடு \(12\) இணைகள் கொண்ட வளைந்த, தட்டையான விலா எலும்புகளைக் கொண்டது. அவை மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.

விலா எலும்புக் கூட்டின் பகுதிகள்