PDF chapter test TRY NOW
உணர் உறுப்புகள் வெளி உலகின் சாளரங்கள் ஆகும். உணர் உறுப்புகள் நமது சுற்றுப்புறத்தை நாம் தெரிந்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகின்றன. உணர் உறுப்புகளால் மட்டுமே நாம் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் உணர்தல் போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.
நம் உடலில் ஐந்து உணர் உறுப்புகள் உள்ளன. அவை
- கண்கள்
- காதுகள்
- மூக்கு
- நாக்கு
- தோல்
கண்கள்
கண்கள் மூலம் நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்களை நாம் பார்க்க உதவுகிறது. அதன் நிறம், வடிவம், அளவு மற்றும் அப்பொருள் அருகில் உள்ளதா அல்லது தொலைவில் உள்ளதா, மேலும், நகர்கின்றதா, இல்லை நிலையாக உள்ளதா என்பது பற்றிக் காணமுடிகிறது. கண் இமைகள், மற்றும் கண் புருவங்கள் கண்ணில் தூசியும், அழுக்கும் படியாமல் கண்களைப் பாதுகாக்கும்.
கண் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை
- கார்னியா
- ஐரிஸ்
- கண்மணி (பியூப்பில்)
கண்
செவிகள்
செவிகள் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு ஒலிகளைக் கேட்பதற்கு உதவுகின்றன. அவை ஒலி மிகுந்தவையா, மென்மையானவையா, மகிழ்ச்சி தரும் ஒலியா, விரும்பத்தகாத ஒலியா அல்லது மந்தமான ஒலியா என்று வேறுபடுத்தவும் முடிகிறது. மேலும், செவிகள் நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், மலையில் ஏறும் போதும் நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் புறச் செவி மடல் (Pinna) என்றழைக்கப்படுகிறது.
செவியானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை,
- புறச்செவி
- நடுச்செவி
- உட்செவி
செவி