PDF chapter test TRY NOW
மனிதனுக்கு நன்கு வளர்ச்சியடைந்த உறுப்பாக நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் ஆகியவை உள்ளடங்கும்.
நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.
மூளை
நம் மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் ஆன படலம் பாதுகாக்ககிறது. இச்சவ்வுகளுக்கு மூளை உறைகள் (Meninges) எனப்படும். மூளையானது உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும். மேலும், இது நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தி ஆகியவற்றின் இருப்பிடமாக அமைகிறது. மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை
- முன் மூளை
- நடு மூளை
- பின் மூளை
மூளை
தண்டுவடம்
இது பின்மூளையில் உள்ள முகுளத்தின் தொடர்ச்சி ஆகும். இவை, முதுகெலும்புத் தொடரினால் மூடப்பட்டிருக்கிறது. தண்டுவடமானது, மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது.
தண்டுவடம்
பக்க நரம்புகள்
ஊடுகதிர் நரம்பு அல்லது இடை காஸ்டல் நரம்பு, ஆர நரம்பு, தொடை நரம்பு இவை அனைத்தும் பக்க நரம்புகள் எனப்படும். இது, நரம்புகள் மற்றும் நரம்புத்திரள்கள் சேர்ந்து உருவான வலைப்பின்னல் போன்ற அமைப்பு கொண்டது. இதன் மூலம் மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து முழு பகுதிகளுக்கு சமிக்ஞைகள் கடத்தப்படுகின்றன.
நரம்பு மண்டலத்தின் செயல்கள்
1. உணர்ச்சி உள்ளீடு — உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை (செய்தி) கடத்தப்படுதல்.
2. ஒருங்கிணைப்பு — உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைத்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.
3. செயல் வெளிப்பாடு — மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகள் செயல்படும் உறுப்புகளாகிய தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.
Important!
மூளையில் நூறு மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் என கூறப்படுகிறது.