PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாலைவன தாவரங்களின் சில பண்புகள்:
  • பாலைவனத் தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கும் தடிமனான இலைகளைப் பெற்றுள்ளன.
  • கள்ளித் தாவரம் போன்ற தாவரங்கள் தண்டில் நீரைச் சேமித்து வைத்திருக்கின்றன, அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன.
  • இவை நன்கு வளர்ச்சியடைந்த நீளமான வேர்களைக் கொண்டுள்ளதால் மண்ணில் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.
பாலைவன வாழிடங்களின் வகைகள் பின்வருமாறு:
  1. வெப்பமான வறண்ட பாலைவனங்கள்
  2. மித வெப்பமான பாலைவனங்கள்
  3. கடல் சார்ந்த பாலைவனங்கள்
  4. குளிர் பாலைவனங்கள்
shutterstock_1769440025.jpg
சப்பாத்திக் கள்ளி
 
shutterstock_493351780.jpg
அகேவ்
 
Important!
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதி வடமேற்கு இந்தியாவிலுள்ள ராஜஸ்தானிலும், மற்றொரு பகுதி கிழக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலும் காணப்படுகிறது.