PDF chapter test TRY NOW

தாவரங்கள் பல ஆண்டுகளாக அவை வாழும் வாழிடங்களின் சுற்றுச்சூழல் இடர்பாடுகளைக் கடந்து தொடர்ந்து வாழ்வதற்க்கேற்ற வகையில் அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்களே தகவமைப்புகள் எனப்படும்.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது வாழிடங்களில் வாழும் தாவரங்கள், அங்கு வாழ்வதற்கேற்ற குறிப்பிட்ட தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
  
இத்தலைப்பின் கீழ் மூன்று விதமான தகவமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
 
1. பற்றுக்கம்பி (ஏறு கொடிகள்)
 
பற்றுக்கம்பியானது மெலிந்த தண்டுடைய தாவரங்களில் பற்றி ஏறும் அமைப்பைக் கொண்ட ஒரு உறுப்பாகும். ஓர் ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு தாவரங்கள் மேல் ஏறுவதற்கேதுவாக பற்றுக்கம்பி உள்ளது.
  • இனிப்புப் பட்டாணி - சிற்றிலைகள்பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
  • பாகற்காய் - கோணமொட்டுபற்றுக் கம்பிகளாக மாற்றமடைகிறது.
shutterstock_104675297.jpg
இனிப்புப் பட்டாணி
  
shutterstock_1164365584.jpg
பாகற்காய்
 
2. பின்னு கொடி
 
சில தாவரங்கள் நீண்ட, மெலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. அவை தானாக நேராக நிலைத்து நிற்கும் தன்மையற்றவை. அவை ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன.
Example:
சங்குப் பூ, கொடி அவரை, மல்லிகை
shutterstock_2149285157.jpg
சங்குப் பூ
 
shutterstock_245719951.jpg
மல்லிகை
  
 3. முட்கள்
  
சில தாவரங்கள் கூர்மையான கட்டமைப்புகளைக் (ஓரளவிற்கு கூரிய முட்களையோ அல்லது சிறிய முட்களையோ) கொண்டிருக்கும். இவை உண்மையில் இலைகளாகும். இது தாவரத்திற்கு இரு வகையில் உதவுகிறது. தாவரத்திலிருந்து நீர் ஆவியாதலைக் குறைக்கிறது. தாவரத்தை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.
Example:
  • அகேவ் (ரயில் கற்றாழை) -  இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.
  • சப்பாத்திக் கள்ளி - சப்பாத்திக் கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன.
  • காகிதப் பூ  (போகெய்ன்வில்லே) தண்டுப் பகுதியில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன.
shutterstock_1966838605.jpg
அகேவ்
 
Important!
வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம் மூங்கில் ஆகும்.