PDF chapter test TRY NOW

அறிமுகம்
உயிரினங்களின் வாழ்க்கைமுறை, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒர் இயற்கை அறிவியல், உயிரியல் ஆகும்.
இந்த உலகம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் பல உயிரினங்களைக் கொண்டது. தாவரங்கள் உணவைத் தானே தயார் செய்து கொண்டு, தானே வளர்ந்து, இனப்பெருக்கமும் செய்து கொள்ளும் திறன் கொண்டவை. இவற்றின், பல்வேறு பகுதிகள் உணவாகவும், மருந்தாகவும், மரக்கட்டையாகவும் மற்றும் தங்குமிடமாகவும் பயன்படுகின்றன.
தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்
Important!
ஒரு மனிதனின் உடல் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது போல், தாவரங்களும் இலை, தண்டு, வேர் மற்றும் மலர்கள் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன.
தாவரங்கள் அமைப்பிலும், நிறங்களிலும் வேறுபட்டாலும், அவை ஒரு சில பண்புகளில் ஒன்று பட்டு காணப்படும். பெரும்பாலான தாவரங்களின் தண்டு மற்றும் இலைகள் நிலத்திற்கு மேலேயும், அவற்றின் வேரானது நிலத்திற்குக் கீழேயும் உள்ளது.

பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன. அவை:
  • வேர்த் தொகுப்பு
  • தண்டுத் தொகுப்பு
YCIND25052022_3809_Plant_TM_2.png
தாவரங்களின் உடல் பாகங்கள்