PDF chapter test TRY NOW
பல செல்களால் ஆன உயிர்களே தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகும். அவற்றிற்கு தனித்தனி பண்புகள் உள்ளன. இவ்வகை செல்கள் யுகேரியாடிக் செல்கள் எனப்படும்.
தாவர செல்களின் முக்கிய பண்புகள்:
- இவை அளவில் விலங்குச் செல்களை விடப் பெரியவை மற்றும் கடினத்தன்மை மிக்கவை.
- இந்தச் செல்களைச் சுற்றி செல்சுவர் மற்றும் செல் சவ்வு அமைந்து உள்ளது. செல்சுவர், செல்லுலோஸினால் உருவானது.
- இதில் பசுங்கணிகங்கள் உள்ளன. அதில் உள்ள பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு உணவினைத் தயாரிக்க உதவுகின்றது.
- தாவர செல்களில் பெரிய நுண்குமிழிகள் உள்ளன. இவற்றின் உதவியால், தாவரங்கள் தாங்கள் உருவாக்கிய உணவைச் சேமித்து வைக்கின்றன.
- இவற்றில் சென்டரியோல் இல்லை.
விலங்கு செல்களின் முக்கியப் பண்புகள்:
- இவை அளவில் தாவர செல்களை விடச் சிறியவை மற்றும் கடினத் தன்மை அற்றவை.
- இவற்றில் செல்சவ்வு உள்ளது. ஆனால் செல்சுவர் இருக்காது.
- விலங்கு செல்களில் பசுங்கணிகம் இருக்காது. ஆகவே, இவற்றால் உணவைத் தயாரிக்க இயலாது.
- சிறிய நுண்குமிழிகள், செல்லின் ஓரத்தில் இருக்கும்
- இதில் சென்டரியோல் உண்டு.