PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசெல்கள் இரண்டு வகைப்படும். அவை பின்வருமாறு,
- புரோகாரியோடிக் செல்கள், தெளிவற்ற உட்கரு கொண்டவை. மேலும், புரோ என்பது, முதன்மையான அல்லது பழமையான உட்கரு கொண்டவை என்று பொருள்.
- யூகேரியோடிக்கள், தெளிவான உட்கரு மற்றும் உட்கரு சவ்வினால் சூழப்பட்டும் உள்ளவை. யூ என்பது, உண்மையான உட்கரு கொண்டவை என்று பொருள்.
புரோகாரியோடிக் செல்கள்:
- பொதுவாக இவை ஒரு செல் உயிரிகள் ஆகும்.
- இதில் தெளிவான உட்கரு இருக்காது.
- இவற்றின் உட்கரு நியூக்ளியோயிட் எனப்படும்.
- இவை நியூக்ளியோலஸ் இருக்காது.
- இந்த செல்களையும் அதன் நுண்ணுறுப்புகளையும் சுற்றி செல் சவ்வு இருக்காது.
- இவை தான், உலகில் முதன் முதலில் உருவானவை.
- விட்டம் - \(0.003\) மைக்ரோமீட்டர் முதல் \(2.0\) மைக்ரோமீட்டர்.
Example:
எக்ஸெரிசியா கோலை பாக்டீரியா
யூகேரியோடிக் செல்கள்:
- பல செல் உயிரிகள் (சில நூறு முதல் சில மில்லியன் வரை).
- தெளிவான உட்கரு உள்ள செல்கள்.
- இவை அளவில் பெரிதாக இருக்கும்.
- செல் சவ்வினால் சூழப்பட்டு இருக்கும்.
- சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் இருக்கும்.
- இவற்றில் நியூக்ளியோலஸ் இருக்கும்.
Example:
தாவர செல்கள், விலங்கு செல்கள், பூஞ்சைகள், ஆல்கே
புரோகாரியோடிக் மற்றும் யூகேரியோடிக் செல்கள்