PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசெல்கள் அனைத்தும் ஒரே அளவில் இருப்பதில்லை. அவை, செயல் மற்றும் பண்பிணைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக பின் வருமாறு,
செல்களின் வடிவங்கள்
செல்களின் அளவு:
சிறியது முதல் பெரியது வரையிலான செல்கள் படமாக பின்னே கொடுக்கப்பட்டு உள்ளன.
அளவினைப் பொறுத்து செல்களின் வகைகள்
செல்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு உயிரினத்துக்கும் மாறுபடும். ஒரே ஒரு செல் கொண்ட ஒரு செல் உயிரினங்களும் உள்ளன.
Example:
வைரஸ், பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனாஸ், ஈஸ்ட்
அதை போலவே பல செல் (சில நூறு முதல் சில மில்லியன் வரை) கொண்ட உயிரினங்களும் உள்ளன.
Example:
- மிகச் சிறிய செல் (மைக்கோபிளாஸ்மா): \(0.2 - 0.3\) \(\mu m\)
- பாக்டீரியா செல்லின் அளவு: \(1 - 2\) \(\mu m\)
- மனித இரத்த சிவப்பு அணுக்கள்: \(7\) \(\mu m\) விட்டம்
- மனித நரம்பு செல் (மிக நீண்ட செல்): \(90 - 100\) மீ
- மனித அண்ட செல்: \(100\) \(\mu m\)
- மிகப் பெரிய ஒரு செல் (நெருப்புக் கோழியின் முட்டை): \(170 -180\) மிமீ
மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை தோராயமாக \(37,000,000,000,000\) (அ) \(3.7 X\) ஆகும்.
செயல்பாடு 2:
நோக்கம்:
வெங்காயத் தோலை நுண்ணோக்கியில் வைத்து பார்த்தல்.
தேவையானவை:
கண்ணாடி மென்தகடு, கண்ணாடி ஸ்லைடு (நழுவம்), வெங்காயம், அயோடின் கரைசல், கத்தி, இடுக்கி, நுண்ணோக்கி
செயல்முறை:
- வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டவும்.
- நல்ல சதைப்பற்றுள்ள ஒரு இலையை எடுத்து அதில் உள்ள ஒளி ஊடுருவகூடிய மெல்லிய சவ்வைப் பிரிக்கவும்.
- நழுவத்தில் ஒரு துளி நீர் விடவும்.
- பின் அதில் அந்தத் தோலினை வைக்கவும்.
- மேலே ஒரு துளி அயோடின் கரைசல் விடவும்.
- அதன் கண்ணாடி மென்தட்டால் மூடி நுண்ணோக்கியில் வைக்கவும்.
காண்பன:
- நுண்ணோக்கியில் நாம் செவ்வக வடிவில் செல்களைக் காண இயலும்.
- ஒவ்வொரு செல்லிலும் உட்கரு இருக்கும்.
வெங்காயத் தோல்
வெங்காய செல்கள்