PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒவ்வொரு உயிரினமும் ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனவையே. செல்களில் வகைகள் மாறுபட்டாலும் அவற்றிற்கு சில ஒத்த பண்புகள் உள்ளன.
செல்லின் கண்டுபிடிப்பு:
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் ராபர்ட் ஹூக் ஆவார். மேலும் அவர் ஒரு கணித அறிஞர், சிறந்த கண்டுபிடிப்பாளர். அவர் ஆரம்ப காலகட்டதில் பயன்படுத்தப்பட்ட எளிய நுண்ணோக்கியை சில மாற்றங்கள் மூலம் கூட்டு நுண்ணோக்கியாக (compound microsope) மாற்றி அமைத்தார்.
ராபர்ட் ஹூக்
அந்த நுண்ணோக்கிக்கு அருகில் ஒரு விளக்கினை வைத்து அதில் இருந்து வரும் ஒளியினை நீர் லென்ஸ் மூலம் குவியச் செய்தார். அந்த ஒளியின் மூலம் பொருட்களின் நுண்ணிய பகுதிகளை கூட தெளிவாக காண முடிந்தது.
கூட்டு நுண்நோக்கி
செல்லுலா:
ஒரு முறை அவர் மரத்தக்கையை நுண்ணோக்கியில் கண்டபோது அது ஒரே மாதிரியான அறைகளை கொண்டு இருந்தது அவரை வியப்படையச் செய்தது. மேலும் அவர் பலவற்றை கொண்டு ஆராய்ந்தார். வண்ணத்துப் பூச்சியின் இறகுகள், தேனிக்களின் கண்கள் போன்றவற்றை ஆராய்ந்தார்.
இதன் மூலம் அவர் \(1665\)ம் ஆண்டு தனது புத்தகமான "மைக்ரோகிராபியா" நூலில் முதன் முதலாக செல் எனும் சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பை விளக்கினார்.
இலத்தீன் மொழியில் "செல்லுலா" என்றால் சிறிய அரை என்று பொருள்.
Important!
செல்லைப் பற்றிய அறிவியல் படிப்பு செல் உயிரியல் எனப்படும்.
செயல்பாடு 1
நோக்கம்:
தனி செல்லின் அமைப்பைக் கண்டறிதல்.
தேவையானவை:
கோழி முட்டை, ஒரு தட்டு
செயல்முறை:
- முட்டையின் ஓட்டை உடைத்து கவனமாக தட்டில் ஊற்றவும்.
காண்பன:
- மஞ்சள் நிற பகுதி - உட்கரு
- வெள்ளை நிற பகுதி - ஒளி ஊடுருவ கூடிய சைட்டோபிளாசம்
- ஓட்டின் உள்ளே உள்ள மெல்லிய சவ்வு - செல் சவ்வு
உடைந்த கோழி முட்டை