PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயற்பியல் மாற்றம்:
 
இது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒருப் பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இயற்பியல் பண்பில் மட்டுமே ஏற்படும் மாற்றமே இயற்பியல் மாற்றம் ஆகும். இதனால் புதிய பொருள் எதுவும் உருவாகுவது இல்லை.
    Example:
  • பனிக்கட்டி உருகுதல்.
  • உப்பு அல்லது சர்க்கரையைக் கரைசல் ஆக்குவது.
  • ரப்பர் வளையத்தினை இழுத்தல்.
நீரில் நடைபெறும் இயற்பியல் மாற்றங்கள்:
 
நீரானது திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ளது. இதில் வெப்பப்படுத்துதல் மற்றும் குளிர்வித்தல் என்ற இரண்டு செயல்களின் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்தலாம். வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது. குளிரவைக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.
 
நீரின் நிலை மாற்றங்களும் அதன் பெயர்களும்:
 
YCIND20052022_3757_Air_TN_6th_Tamil.png
 
உருகுதல்:
  
பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல்.
 
ஆவியாதல்:
  
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல்.
 
ஆவி சுருங்குதல்:
  
நீராவியைக் குளிரவைத்து நீராக மாற்றுதல்.
 
உறைதல்:
 
நீரைக் குளிர செய்து பனிக்கட்டியாக மாற்றுதல்.
 
பதங்கமாதல்:
ஒரு திடப் பொருள் வெப்பப்படுத்தப்படும் போது திரவமாக மாறாமல் நேரடியாக வாயுவாக மாறுவதே பதங்கமாதல் என்றுக் கூறப்படும்.
Example:
கற்பூரம்.
கரைதல்:
திண்ம நிலையில் உள்ள துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நீரின் மூலக்கூறுகளின் இடையேப் பரவுவதே கரைதல் ஆகும்.
shutterstock109588754.jpg
  • கரைப்பான்: இது ஒரு பொருளை கரைக்க கூடிய பொருள் ஆகும்.
  • கரைபொருள்: இது கரைப்பானில் கரைய கூடிய பொருள் ஆகும்.
  • கரைசல்: கரைபொருள், கரைப்பானில் கரையும் போது இது உருவாகிறது.
Important!
நீர் ஒரு பொது கரைப்பான், எனவே இது பெரும்பாலான பொருள்களை கரைக்கும்.
செயல்பாடு:
 
செயல்: ஒருக் கண்ணாடி குவளையில் பகுதி அளவு நீரில், ஒருத் தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தல்.
 
காண்பது: சர்க்கரை நீரில் கரைந்து கரைசலை உருவாக்குகிறது.
 
அறிவது: சேரக்கப்பட்டச் சர்க்கரை நீரில் முற்றிலும் கரைகிறது. இதில் கரைபொருள் சர்க்கரை, கரைப்பான் நீர் ஆகும். ஒரு குவளை நீரும், ஒரு குவளை சர்க்கரைக் கரைசலும் தோற்றத்தில் ஒன்று போல உள்ளன.