PDF chapter test TRY NOW
ஒருப் பொருளின் வேதியியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமே வேதியியல் மாற்றம் ஆகும். இதன் மூலமாக புதியப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.

- மரம் எரிதல்
- சோளம் பொறிதல்.
- வெள்ளி ஆபரணங்கள் கருமை ஆகுதல்.
- இரும்பு துருப் பிடித்தல்.
Example:
இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றத்திற்கான வேறுபாடுகள்:
இயற்பியல் மாற்றம்:
- இதில் புதியப் பொருள்கள் உருவாகுவது இல்லை.
- இதனால், வேதி இயைபில் எந்த மாற்றமும் இல்லை.
- இது ஒரு மீள் வினை.
வேதியியல் மாற்றம்:
- இதில் புதியப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
- இதனால், வேதி இயைபில் மாற்றம் உருவாகிறது.
- இது ஒரு மீளா வினை.
செயல்பாடு:
செயல்: விறகு எரிவது
அறிவது: இது ஒரு வேதியியல் மாற்றம்.
செயல்: நீர் ஆவியாகுவது.
அறிவது: இது ஒரு இயற்பியல் மாற்றம்.
செயல்: சாக்லேட் உருகுவது.
அறிவது: இது ஒரு இயற்பியல் மாற்றம்.
செயல்: சோளம் பொறிவது.
அறிவது: இது ஒரு வேதியியல் மாற்றம்.