PDF chapter test TRY NOW
விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்:
விரும்பத்தக்க மாற்றங்கள்:
சுற்றுச்சூழலுக்குப் பயன்படக்கூடிய, விரும்பப்படக் கூடிய மற்றும் எதனையும் பாதிக்காத மாற்றங்களே விரும்பத்தக்க மாற்றங்கள் ஆகும்.
- காய் கனியாக மாறுவது.
- பருவநிலை மாற்றம்.
- தாவரங்கள் வளர்தல்.
- உணவு சமைத்தல்.
- பால் தயிராக மாறுவது.
Example:
விரும்பத்தகாத மாற்றங்கள்:
விரும்பப்படாத மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் செய்யும், எந்த ஒருப் பயனையும் தராத மாற்றங்களே, விரும்பத்தகாத மாற்றங்கள் ஆகும்.
- காடுகள் அழிதல்
- பழம் அழுகுதல்.
- இரும்பு துருப் பிடித்தல்.
Example:
செயல்பாடு:
செயல்: காட்டுத்தீ
அறிவது: இது ஒரு விரும்பத்தகாத மாற்றம். இதனால் எந்தப் பயனும் இல்லை.
செயல்: பழம் அழுகுதல்.
அறிவது: இது ஒரு விரும்பத்தகாத மாற்றம். இதனால் எந்தப் பயனும் இல்லை
செயல்: முட்டையில் இருந்து குஞ்சு பொரித்தல்.
அறிவது: இதன் மூலமாகக் கோழிக் குஞ்சுகள் வருகின்றன. இது ஒரு விரும்பத்தக்க மாற்றம் ஆகும்.
செயல்: காற்றாலை.
அறிவது: காற்றில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகின்றது. இது ஒரு விரும்பத்தக்க மாற்றம் ஆகும்.
இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
இயற்கையான மாற்றங்கள்:
தானாகவே, இயற்கையாக மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடைபெறும் மாற்றங்கள், இயற்கையான மாற்றங்கள் ஆகும்.
- புவியின் சுழற்சி
- மழை பெய்தல்
- அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலாவின் வடிவ மாற்றம்.
Example:
மனிதனால் ஏற்படக்கூடிய அல்லது செயற்கையான மாற்றங்கள்:
தன் விருப்பத்திற்காக மனிதன் ஏற்படுத்தும் மாற்றங்களே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அல்லது செயற்கையான மாற்றங்கள் ஆகும். இவை தன்னிச்சையாக நடைபெறுவது இல்லை.
- சமைத்தல்
- காடுகளை அழித்தல்
- பயிரிடுதல்
- கட்டிடங்களைக் கட்டுதல்.
Example: