PDF chapter test TRY NOW
மின்சாரம் அனைத்துப் பொருட்களின் வழியேயும் பாயுமா?
மின்சாரக்கம்பியின் உள் விளக்கப்படம்
மின்சாரக்கம்பியை வெட்டி பிரித்துப் பார்க்கும் பொழுது, உள்ளே உலோகத்தால் ஆன கம்பியும் அதன் மேல்பகுதியில் வேறு ஒரு மின்கடத்தாப் பொருளால் ஆன உறையும் இருப்பதைக் காணலாம். ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது ?
மின் கடத்திகள்:
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்தப் பொருள்கள் தன் வழியாக மின்னூட்டஙகள் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை மின் கடத்திகள் என்கிறோம்.
Example:
உலோகத்தலான தாமிரம், இரும்பு, அலுமினியம், மற்றும் மாசுபட்ட நீர், புவி, போன்றவை மின் கடத்திகள் ஆகும்.
அரிதிற் கடத்திகள்:
எந்த எந்த பொருள்கள் தன் வழியாக மின்னூட்டங்கள் செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை அரிதிற் கடத்திகள் (அ) மின்கடத்தா பொருள்கள் என்கிறோம்.
Example:
பிளாஸ்டிக் , கண்ணாடி , மரம், ரப்பர் , பீங்கான்கள் , எபோனைட் போன்றவை ஆகும்.
மின் அதிர்ச்சி ஏற்பட்ட நபர்
- மின் அதிர்வு ஏற்படக் காரணமான மின் இணைப்பைத் துண்டிக்கவும்.
- சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்கவும்.
- மின்கடத்தாப் பொருட்களைக் கொண்டு அவரை மின்கம்பியின் இணைப்பிலிருந்து தள்ளவும்.
- அவருக்கு முதலுதவி தந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.