PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மின்கலன் என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஒரு கருவியாகும். நேர் மற்றும் எதிர்மின் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் மின்பகுளியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதில் இரு வேறுபட்ட உலோகத் தகடுகள் மின்முனைகளாகப் பொருத்தப்பட்டு மின்கலன் உருவாக்கப்படுகிறது.
 
shutterstock1293820591w1017.jpg
வேதிக்கரைசல்
 
வேதிவினைகள் மூலம் ஒரு மின் முனை நேர்மின்வாயாகவும், மற்ற மின் முனை எதிர் மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரத்தைத் தருகிறது.
 
YCIND_220601_3707_13.png
மாதிரி சுற்று
 
தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதைப் பொறுத்து மின்கலன்கள் முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள் என இரு வகைப்படும்.
 
முதன்மை மின்கலன்கள்:
  • இவ்வகை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. எனவே, இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும்.
  • பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன
Example:
சுவர்க் கடிகாரம், கைக் கடிகாரம் மற்றும் ரோபோ பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் ஆகும்.
 
shutterstock431194957.jpg
முதன்மை மின்கலன்
 
துணை மின்கலன்கள்:
  • துணை மின்கலன் என்பது பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடியது. அதாவது, ஒருமுறை பயன்படுத்தியப்பினபு, மீணடும் மீணடும் மின்னேட்டம்  உருவாக்கப்படுகிறது.
  • துணைமின்கலன்கள்  உருவளவு அதன் பயன்பட்டைப் பொருத்து சிறியதாக அல்லது பெரியதாக இருக்கும்.
  • கைபேசியில் பயன் படுத்தப்படும் துணை மின்கலனின்  அளவு  உள்ளங்கையளவு சிறியதாகவும், கனரக வாகனங்களான  மகிழுந்து மற்றும் பேருந்து போன்றவற்றில் பயன்டுத்தப்படும் துணை மின்கலன்கள் பெரியதாகவும்  கனமானதாகவும்  இருக்கும்.
Example:
கைப்பேசி்கள், மடிக்கணினி்கள்அவசர கால விளக்குகள்  மற்றும் வாகனங்கள் ஆகியவேற்றில் பயன்டுத்தப்படும் மின்கலன்கள்.
 
LiIonbatteriesformobilephones.jpg
துணை மின்கலன்
 
மின்கல அடுக்கு:
 
10.png
மின்கல அடுக்கு
  •  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களை இணைத்து, மின்கல அடுக்கு உருவாக்கப்படுகிறது.
  • மின்கல அடுக்கு என்பது பல மின்கலன்களின தொகுப்பு ஆகும்.