PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு முறை செல்வத்தின்அப்பா, செல்வத்திடம் டார்ச் விளக்கு எடுத்து வரச் சொல்கிறார். டார்ச் விளக்கு எடுத்து வரும்பொழுது கீழே விழுந்து மின்கலன்கள் வெளியே வந்துவிட்டன. மின்கலன்களை உள்ளே வைத்து இயக்கியும் டார்ச் விளக்கு ஒளிரவில்லை.
  
டார்ச் விளக்கு பழுதடைந்துவிட்டதாகக் கருதி செல்வம் அழத் தொடங்கினான். அங்கு வந்த அவனது மாமா, மின்கலன்களை சரியாகப் பொருத்தி டார்ச் விளக்கை ஒளிரச் செய்தார். செல்வத்தின்  முகமும் ஒளிர்ந்தது. மாமா காரணத்தைக் கூறி மின்சுற்றுகள் குறித்து அவனுக்கு விளக்கினார்.
 
YCIND_220601_3707_9.png
 டார்ச் விளக்கின் உட்புற அமைப்பிற்கான படம்
 
மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர்முனையிலிருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.
மின்சுற்று என்பது பொதுவாகப் பின்வருவனவற்றால் உருவாக்கப்படும்.
  • மின்கலன் (அ) மின்கல அடுக்கு என்பது மின்னோட்டத்தைத் தரும் மூலம்.
  • இணைப்புக்கம்பிகள் மின்னோட்டத்தை எடுத்துச் செல்வது.
  • மின்விளக்கு என்பது மின்னாற்றலைப் பயன்படுத்தும் அமைப்பு.
  • சாவி என்பது மின்னோட்டத்தைத்  தேவையானபோது செலுத்தவோ, நிறுத்தவோ பயன்படும் அமைப்பு. இது மின்சுற்றின் எப்பகுதியிலும் இணைக்கப்படலாம்.
மின் சுற்றில் இரண்டு வகையான மின் சுற்றுகள் உண்டு. அவை முறையே
  • திறந்த மின்சுற்று,
  • மூடிய மின்சுற்று.
திறந்த மின்சுற்று:
 
YCIND_220601_3707_7.png
திறந்த மின் சுற்று
  • ஒரு மின் சுற்றில் சாவியானது திறந்த நிலையில் (\(OFF\)) இருந்தால் அந்த மின் சுற்றில் மின்னோட்டம் செல்லாது. அத்தகைய மின் சுற்று திறந்த மின் சுற்று எனப்படும். இதில் மின் விளக்கு ஒளிராது.
மூடிய மின்சுற்று:
 
YCIND_220601_3707_8.png
மூடிய மினசுற்று
  • ஒரு மின் சுற்றில் சாவியானது மூடிய (\(ON\)) நிலையில் இருப்பின் அந்தச் சுற்றில் மின்னோட்டம் பாயும். எனவே மினவிளக்கு ஒளிரும். இது மூடிய மினசுற்று எனப்படும்.