PDF chapter test TRY NOW
தரவுகள் பிட் (Bit) என்ற அலகு கொண்டு அளவிடப்படுகிறது. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 என்னும் ஈரடிமான எண்கணைக் குறிப்பதாகும்.குறுவட்டில் (CD) சேமிக்கும் தகவலை வி்ட, 6 மடங்கு அதிகமாக DVD தட்டில் சேமிக்க முடியும்.
கணினியின் வகைகள்:
கணினியானது அவற்றின் அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம்,செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் கணினியை நான்கு வகையாக பிரிக்கலாம். அவைகள் முறையே,
- மீக்கணினி (Super Computer)

- பெருமுகக்கணினி (Mainframe Computer)

- நுண்கணினி அல்லது தனியாள் கணினி (Micro or Personal Computer)

- குறுமுகக்கணினி (Mini Computer)

நுண்கணினி அல்லது தனியாள் கணினி (Micro or Personal Computer) :
நுண்கணினி (Micro Computer) என்றழைக்கப்பட்ட கணினியையே தற்போது தனியாள் கணினி என்று அழைக்கின்றோம். இக்கணினியைப் பயன்படுத்துவதற்கு எளிதாக (user friendly) இருப்பதால், பயனாளர்கள் மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.
- மேசைக்கணினி (Desktop)
- மடிக்கணினி (Laptop)
- பலகைக் கணினி (வரைப்பட்டிகை) (Tablet)