
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகாந்தங்களை உருவாக்குவோமா? செயற்கைக் காந்தங்கள் தயாரிக்கப் பல முறைகள் உள்ளன. அதில் ஓர் எளிய முறையை பற்றிப் பார்ப்போம். ஓர் ஆணி அல்லது சிறிய இரும்புத் துண்டை மேஜையின் மீது வைக்கவும். ஒரு சட்டகாந்தத்தின் ஒரு முனையை ஆணி / சிறிய இரும்புத்துண்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒரே திசையில் தேய்க்கவும். தேய்க்கும்போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும். \(30\) அல்லது \(40 \) முறை இதேபோல் செய்யவும். ஆணி / இரும்பு த்துண்டு காந்தமாக மாறி உள்ளதா?
.
அதன் அருகில் சில குண்டூசிகள் அல்லது இரும்புத்தூள்களைக் கொண்டு செல்லவும். அவை காந்தமாக்கப்பட்ட ஆணி/ இரும்புத்துண்டால் ஈர்க்கப்படுகின்றனவா?
.
இல்லையெனில் இதே முறையைப் பின்பற்றி மறுபடியும் செய்து பார்க்கவும்.