PDF chapter test TRY NOW
மின்காந்தத் தொடர்வண்டி மிதக்கும் தொடர்வண்டி என்றும், பறக்கும் தொடர்வண்டி என்றும் குறிப்பிடபடுகிறது.
மிதக்கும் தொடர்வண்டி
மிதக்கும் தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
- டீசல், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை, காந்தத்தின் ஈர்ப்பு விசை மற்றும் விலக்கு விசைக் கொண்டு இந்த அதிவேகமான தொடர் வண்டி இயக்கப்படுகிறது.
- மின்காந்த தொடர்வண்டியில் மின்காந்தங்களை பயன்படுத்துகின்றனர். மின்சாரத்தை பாய்ச்சும்போது மட்டுமே காந்ததன்மை அடைகின்றது, மின்சாரத்தை திசை மாற்றும் போது இதன் துருவங்கள் மாற்றம் அடைகின்றன.
- தொடர் வண்டியின் அடிப்பகுதியில், தண்டவாளத்தில் காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குதலின் விளைவாக இந்த தொடர் வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து \(10\) செ.மீ மேலே சற்று உயர்ந்து அந்தரத்தில் நிலையாக நிற்கிறது.
காந்தத்தின் ஈர்ப்பு விசை மற்றும் காந்தத்தின் விலக்கு விசையை கொண்டு காந்தத்தால் ஆன பொருளை நகர்த்தி கொள்ள இயலும் அல்லவா?
தண்டவாளங்கள்
- தண்டவாளங்களின் பக்கவாட்டில் மற்றும், தொடர்வண்டியின் கீழே பக்கவாட்டில் உள்ள காந்தத்தின் உதவியால் தொடர்வண்டி முன் நோக்கி நகர்கிறது. மின்னோட்டத்தை கொண்டு இந்த காந்தங்களை நாம் கட்டுப்படுத்தலாம்.
- இத்தொடர்வண்டியில் சக்கரங்கள் மாதிரயான அசைகின்ற பொருள் எதுவும் இல்லை என்பதால் உராய்வினால் ஏற்படும் விசைகள் இங்கு இருக்காது.
- இதன் மூலம் மணிக்கு \(300\) கி.மீ வேகத்தை எளிமையாக அடைய முடியும். மேலும், இது மணிக்கு \(600\) கி.மீ வேகத்தில் கூட செல்லக்கூடியது.
- உராய்வு இல்லாததால், இது நகறும் போது அதிகமாக சத்தம் வருவதில்லை, குறைவான மின்சாரத்திலும் செயல்படுத்த முடியும். சுற்றுபுற சூழலை பாதிப்பதில்லை. பிற நாடுகளிலும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்,
- சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இத்தகைய தொடர் வண்டியை பயணிகளின் போக்குவரத்திரற்காக பயன்படுத்துகின்றனர்.
- இந்தியாவில் இதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய்ந்து கொண்டு இருக்கிறது.
இப்பொழுது சாதாரண தொடர்வண்டிக்கும், மின்காந்த தொடர்வண்டிக்கும் உள்ள வேறுபாடுகளைக் காண்போம்.
சாதாரண தொடர்வண்டி:
- ஓடும்போது உராய்வு ஏற்படும்.
- அதிக சத்தம் எழுப்பும், இயங்குவதற்க்கு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
- தொடர்வண்டியில் வெளியேறும் புகை சுற்று சூழலை பாதிக்கிறது.
- குறைவான வேகமே மட்டுமே செல்லும்.
மின்காந்த தொடர்வண்டி:
- ஓடும்போது உராய்வு தவிர்க்கப்படும்.
- சத்தம் எழுப்பாது எரிபொருள் தேவைபடுவதில்லை.
- மின்சாரமே போதுமானது.
- சுற்றுச்சூழலை பாதிக்காதது.
- \(300\) கி.மீ முதல் \(600\) கி.மீ வரை வேகம் வரை செல்லக்கூடியது.