PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் சுழலும் முன்னியாக்கி எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
காந்தத்தின் ஒரே மாதிரியான துருவம் ஒன்றை ஒன்று விலக்க செய்கிறது. படத்தில் உள்ளது போல் இரண்டு சட்ட காந்தத்தை பொருத்த வேண்டும்.
காந்தம் - விலக்கு விசை மற்றும் ஈர்ப்பு விசை
இங்கே என்ன நடக்கிறது ?
காந்தங்களின் விலக்கு விசையை கொண்டு காந்தப் பொருட்களை தூக்கி நிறுத்த முடிகிறது.
இந்த செயல்பட்டிற்கு வளைய காந்தங்கள், இரண்டு \(500\) மில்லி பிளாஸ்டிக் பாட்டில்கள், மணல் மற்றும் ஒரு பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழாய் தேவைப்படும்.
- \(500\) மில்லி பிளாஸ்டிக் பாட்டிலின் மேற்பகுதியை முன்னியக்கியின் இறக்கைகள் வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
முன்னியக்கியின் வடிவத்தில் வெட்டி எடுத்த பாட்டில்
- மேலே உள்ளபடி பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் ஒரு துளையிட வேண்டும்.
- பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவு மண் நிரப்பி கொள்ள வேண்டும். மேலும், அதனை துளையிட்ட மூடியால் மூட வேண்டும்.
உறிஞ்சும் குழாயுடன் மணல் நிறப்பபட்ட பாட்டில்
- மேலே படத்திலுள்ளபடி உறுதியான உறிஞ்சும் குழாயைப் மூடியின் துளை வழியாக செருகி மணனில் நன்கு புதைந்து இருக்குமாறு வைக்க வேண்டும்.
இரு வட்டகாந்தங்களும் மூடியில் ஒட்டுதல்
- படத்தில் உள்ளபடி, முன்னியக்கி இறக்கை வெட்டப்பட்ட மூடியின் உள்ளே ஒரு காந்தமும் வெளியே ஒரு காந்தமும் வைக்க வேண்டும். அவை ஒன்றோடு ஒன்று தானாக ஒட்டிக் கொள்ளும்.
இரு காந்தங்களும் உறிஞ்சி குழாயின் மீது வைத்தல்
- அதேப் போன்று படத்திலுள்ளபடி, உறிஞ்சு குழாயில் சில வளைய காந்தங்களை வைக்க வேண்டும். இங்கு, நாம் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காந்தத்தின் விரட்டும் பண்பு
- முன்னியக்கி இறக்கையை உறிஞ்சி குழாயில் பொருத்த வேண்டும். அதாவது, குழாயில் உள்ள காந்தமும் மூடியில் உள்ள காந்தமும் ஒன்றை ஒன்று விளக்குமாறு வைக்க வேண்டும். இதனால் உறிஞ்சி குழாயில் தூக்கி நிறுத்தப்படும்.
- இதை வீட்டுக் கூரையில் பொருத்தப்பட்ட மின் விசிறியின் கீழே வைக்கும் போது வேகமாக சூழல் வதைப் நம்மால் பார்க்க முடியும்.
இந்த விளையாட்டுப் பொருள் உங்களுக்குப் பிடித்திருந்ததா?
மின்காந்தத் தொடர்வண்டிகளும் இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன.