PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இப்பகுதியில் காந்தத் தன்மையுள்ள பொருள்கள் மற்றும் காந்தத் தன்மையற்ற பொருள்களைப் பற்றி  அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
   
நாம் பொருள்களின் காந்தத் தன்மையை கண்டறிய ஒரு செயல்பாட்டை மேற்கொள்வோம்.
 
நம் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பல்வேறு பொருள்களின் அருகே ஒரு காந்தத்தினை எடுத்துச் சென்று பார்ப்போம்.
 
என்ன நிகழ்கிறது?
  
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்:
  • இரும்புகள் ஆணி
  • இரும்பு கம்பி
  • ஊசிகள்
  • ஊசி
  • சாவி
  • இரும்புத் தண்டுகள்
shutterstock_2067370790.jpg
காந்தம் -காந்த் தன்மையுள்ள பொருள்கள்
  
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள்:
  • இரப்பர்
  • காகிதம்
  • பிளாஸ்டிக் பேனா
  • பென்சில்
  • தண்ணீர் பாட்டில்
shutterstock_1171731961.jpg
காந்தம் - காந்தத்தன்மையற்ற பொருள்கள்
  
எவற்றால் ஆன பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன?
 
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்களை உருவாக்க இரும்பு பயன்படுத்தப்படுகிறது.
 
பொருட்கள் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவைகள் முறையே
  • காந்தத் தன்மையுள்ள பொருள்கள்
  • காந்தத் தன்மையற்ற பொருள்கள்
காந்தத் தன்மையுள்ள பொருள்கள்:
 
காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் காந்தத்தன்மையுள்ள பொருள்கள் எனப்படுகின்றன.
Example:
இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை காந்தத்தன்மை உள்ள பொருள்கள் ஆகும்.
  
காந்தத் தன்மையற்ற பொருள்கள்:
 
காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படாதப் பொருட்கள் காந்தத்தன்மையற்ற பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
பிளாஸ்டிக், தோல், இரப்பர் மற்றும் காகிதம் ஆகியவை காந்தத்தன்மையற்ற பொருட்கள் ஆகும். மேலும், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் கூட இயற்கையில் காந்தத்தன்மையற்றவை ஆகும்.
seraizhelezomagnitnajaseparacijaw400pngpngpng.png
மணலிலுள்ள இரும்புத் துகள்களை காந்தங்கள் ஈர்க்கிறது