PDF chapter test TRY NOW

வெவ்வேறு மூலங்களில் இருந்து பெறக்கூடிய நீரின் சார்பளவு:
 
ஒரு \(20\) லிட்டர் வாளி நீரினை எடுத்துக் கொள்வோம். மேலும், ஒரு 500 மி.லி குவளை, ஒரு \(150\) மி.லி டம்ளர் மற்றும் \(1\) மி.லி தேக்கரண்டி (ஸ்பூன்) ஆகியவற்றினை எடுத்துக்கொள்வோம். 20 லிட்டர் அளவுள்ள வாளியின் கொள்ளளவு புவியில் உள்ள மொத்த நீரின் அளவைக் குறிப்பதாக வைத்துக்கொள்வோம்.
 
இப்பொழுது 20 லி வாளியில் இருந்து ஒரு \(500\) மி.லி குவளை அளவு எடுத்தால், அது பூமியில் உள்ள மொத்த நன்னீரின் அளவினைக் குறிக்கும். வாளியில் மீதமுள்ள நீர் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் காணப்படும் நீரின் அளவினைக் குறிக்கும். இது மனித பயன்பாட்டிற்கு உரியது அல்ல. குவளையில் உள்ள நன்னீரில் மலைகள், பனியாறுகள், பனிப்படிவுகள் ஆகியவற்றில் காணப்படும் நீரும் அடங்கியுள்ளதால் இதுவும் மனிதனின் தேவைக்கு முழுவதுமாகப் பயன்படுவதில்லை.
 
பிறகு குவளையில் இருந்து ஒரு \(150\) மி.லி அளவுள்ள டம்ளரில் நீரை எடுக்கவும்.இது புவியில் உள்ள மொத்த நிலத்தடி நீரின் அளவினைக் குறிக்கிறது. இறுதியாக அந்த டம்ளர் நீரிலிருந்து தேக்கரண்டியில் ஒரு கால்பங்கு நீரினை எடுக்கவும். இதுவே பூமியில் உள்ள மொத்த ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள மேற்பரப்பு நீராகும்.
 
இச்செயல்பாட்டிலிருந்து உலகெங்கிலும் பயன்பாட்டிற்கு என உள்ள மொத்த நீரின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம். எனவே நாம் நீரினை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமல்லவா?
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் பார்த்துக் கொள்ளவும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.