PDF chapter test TRY NOW

இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் மூன்று வகையில் காணப்படுகிறது அவை பின்வருமாறு,
  • மேற்பரப்பு நீர்
  • உறைந்த நீர்
  • நிலத்தடி நீர்
i. மேற்பரப்பு நீர்
புவியின் மேற்பரப்பில் தேக்கி வைக்கப்படும் நீர்  மேற்பரப்பு நீர்  எனப்படும்.இதில் மழை மற்றும் பணித்துளிகள் மூலம் பெறப்படும் நீர் அடங்கும். மேலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரும் இவ்வகையில் பெறப்படும் நீராகும்.
Example:
ஆறு, ஏரி, நன்னீர், சதுப்புநில நீர் போன்றவை மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் ஆகும்.
mangroves52054151280jpg.jpg
சதுப்புநில நீர்
 
ii. உறைந்த நீர்
துருவங்களில் உள்ள பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் உறைந்த நிலையில் காணப்படும் நீர்  உறைந்த நீர் எனப்படும்.
பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, அதாவது 68.7% உறைந்த நிலையில் தான் காணப்படுகிறது.
Example:
துருவப்பிரதேசங்களில் (இமயமலை) காணப்படும் நீர்.
matterhorn-3019429_1280.jpg
பனிப்படிவு
 
iii. நிலத்தடி நீர்
நிலத்தடி நீர் என்பது நிலத்தின் அடியில் நிறைந்திருக்கும் நீர் இதில் மழை மூலம் பெறப்படும் நீர் நிலத்தின் உள்ளே சென்று நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. இதனை திறந்த வெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.
Example:
நீரூற்றுகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், அடிகுழாய்கள்.
YCIND25052022_3807_Water_TM1_3.png
 
Important!
குறிப்பு:
 
இமயமலை இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை அரணாக விளங்குகிறது. ஆசியாவின் முக்கிய ஆறுகளில் பத்து மிகப்பெரிய ஆறுகள் இமயமலையில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த ஆறுகள் இந்தியா மற்றும் அருகிலுள்ள நாடுகளில் பாய்கிறது. இமயமலை பனிப்படிவுகள், பெரிய பனிப்பாறைகள் மற்றும் பனியாறுகளைக் கொண்டது. இமயமலை ஏறக்குறைய நூறு கோடி மக்களின் வாழ்வாதாரமான நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது.
லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் நீரின் கனஅளவை அளக்கலாம். நீரின் கன அளவினை அளக்கக்கூடிய அலகு காலன் ஆகும். ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் என்று குறிக்கப்படும். அணைக்கட்டுகளில் உள்ள நீரின் அளவை TMC/Feet என்ற அலகால் அளக்கப்படும். நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
 
ஒரு கன அடி நீர் என்றால் என்ன?
  • \(1\) கன அடி நீர் என்பது \(28.3\) லிட்டர் தண்ணீர் ஆகும்.
ஒரு  டிஎம்சி என்றால் என்ன? 
  • \(1\) டிஎம்சி என்பது \(2830\) கோடி லிட்டர் தண்ணீர் ஆகும்.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு \(93.4\) டிஎம்சி.