PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசூரியனின் வெப்பம் கடல்களில் உள்ள நீரின் ஒரு பகுதியை ஆவியாக மாற்றுகிறது, இது வளிமண்டலத்தில் நுழைந்து நீராவியாக மாற்றப்படுகிறது, அது குளிர்ந்தவுடன், நீராவி குவிந்து மேகங்களை உருவாக்குகிறது. அதிலலிருந்து நீராவி மீண்டும் மழையாக கீழே வருகிறது. இந்த இயற்கை நிகழ்வின் மூலம் நீரானது தூய்மையாக்கப்படுகிறது. இது ஒரு தொடர் நிகழ்வாகும். இந்நிகழ்வே நீர் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது
நீர் சுழற்சியின் மூன்று நிலைகள்:
- ஆவியாதல்
- ஆவி சுருங்குதல்
- மழை பொழிதல்
இந்த நீர் சுழற்சியினை ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle) என்றும் அழைக்கப்படும்.
i. ஆவியாதல்
ஆறுகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்களில் காணப்படும் நீரானது சூரிய வெப்பத்தின் காரணத்தால் ஆவியாகிறது.
ii. ஆவி சுருங்குதல்
வளிமண்டலத்தில் ஆவியாதலின் மூலமாக நுழைந்த நீராவியானது காற்றில் மேலே செல்லச்செல்ல குளிர்ச்சியடைந்து மி்க நுண்ணிய நீரதிவலைகளாக மேகங்களை வானில் உருவாக்குகின்றது.
iii. மழைபொழிதல்
இலட்சக்கணக்கான மிக நுண்ணிய நீர்த்திவலைகள் ஒன்றோடொன்று மோதி பெரிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது. மேகங்களைச் சுற்றியுள்ள காற்றானது குளிர்ச்சியடையும்போது இந்த நீர் மழை புவியை வந்தடைகின்றது. இந்நிகழ்வே மழை பொழிதல் என்றழைக்கப்படுகிறது.
நீராவிப்போக்கு
தாவரங்கள் வேர் மூலம் நீரை உறிஞ்சி தண்டுக்கும் இலைகளுக்கும் அனுப்புகின்றன. இலைகளில் உள்ள சிறுசிறு துளைகள் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.
நீர் சுழற்சியின் காரணமாக இயற்கையில் எப்பொழுதும் காணப்படும் நீரின் மூன்று நிலைகள்.
- ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் உள்ள நீரானது ஆவியாகி நீராவியினை உருவாக்குகின்றது.
- மழைநீரானது நீரின் திரவ வடிவமாகும்.
- மலைச்சிகரங்களிலும், துருவங்களிலும் காணப்படும் பனிப்படிவுகள் மற்றும் பனிப்பாறைகளிலும் நீர் திண்ம வடிவில் காணப்படுகிறது.
இவ்வுலகம் முழுவதும் நீரினைப் பயன்படுத்தினாலும் நீரின் அளவானது நிலையாகவே உள்ளது.