PDF chapter test TRY NOW
நீர் என்பது நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற மற்றும் ஒளிபுகும் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருளாகும்.
நீரின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஓர் ஆக்ஸிஜன் அணுவோடு \(2:1\) என்ற விகிதத்தில் இணைந்து உருவாகிறது. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு\( H_2O\) ஆகும்.
நீரின் இயைபு (அ) தன்மை
நீரின் புற இயைபு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது அவற்றைப் பின்வருமாறு,
-
நீர் சில இடங்களில் தெளிவாகவும்
-
நீர் சில இடங்களில் கலங்கிய நிலையிலும்
-
நீர் சில இடங்களில் ஆக்ஸிஜன் குறைந்தும்
-
நீர் சில இடங்களில் ஆக்ஸிஜன் அதிகாரித்தும்
-
நீர் சில இடங்களில் நன்னீராகவும்
-
நீர் சில இடங்களில் உவர்ப்பாகவும் காணப்படும்
நீரின் வகைகள்
நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் அவை பின்வருமாறு,
- நன்னீர்
- உவர்ப்பு நீர்
- கடல் நீர்
நீரில் கலந்துள்ள உப்பின் அளவு
- நன்னீரில் - \(0.05\)%முதல் \( 1\)% வரை உப்புக்கள் கரைந்திருக்கும்.
- உவர்ப்பு நீரில் - \(1\)% முதல் \(3\)% வரை உப்புக்கள் கரைந்திருக்கும்.
- கடல் நீரில் - \(3\)% மேல் உப்புக்கள் கரைந்திருக்கும்.
கடல் நீரானது அதிகளவு கரைபொருள்களைக் கொண்டுள்ளது.
கடல் நீரில் கரைந்துள்ள உப்புக்கள், அவை
- சோடியம் குளோரைடு
- மெக்னீசியம் குளோரைடு
- கால்சியம் குளோரைடு
குறிப்பு:
பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை \( 0°\) செல்சியஸ் ஆகும். மார்ச் \(22\) ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.