PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
திடக்கழிவு மேலாண்மை விதிகள் மனிதன் ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கையில் செய்யும் சிறிய முயற்சிகள், சிறிய செயல்கள் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். இதற்கு நாம் இரண்டு படிகள் மறக்காமல் நினைவில் இருக்க வேண்டும்.
 
1. ஒவ்வொரு மனிதனும் எப்பொழுதும் தேவையற்ற கழிவுகளை உருவாக்குவதை குறைத்தல் வேண்டும். 3R மற்றும் பிரமிடையும் அதன் படிநிலைகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
2. மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகள் என கழிவுகளை பிரித்து வைத்தல் வேண்டும். மேலும் பிரித்து கழிவுகளை மீண்டும் உபயோகப்படுத்துவதாலும், மறுசுழற்சி உட்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் சுத்தமாகும். மாறுபட்ட கழிவுகளை ஒன்றாக ஒரே இடத்தில் குவிக்கும் போது அந்த இடமே சுற்றுச்சூழலை அசுத்தபடுத்துகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள்
திடக்கழிவு மேலாண்மை (SWM – Solid Waste Management) விதிகள் 2016 ன் படி,
 
1. ஒவ்வொரு வீட்டிலும் திடக்கழிவுகளை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் ஆபத்தான கழிவுகள் என மூன்று வகைகளாகப் பிரித்து, அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் வைத்திருந்து பின்னர் உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பவரிடமோ, தூய்மைப்பணி மேற்கொள்பவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
 
shutterstock1608740197w2000.jpg
குப்பைத் தொட்டி (மக்கும் கழிவுகள்)
 
shutterstock1033559434newjpg.jpg
குப்பைத் தொட்டி (மக்காத கழிவுகள்)
 
2. யாரும் குப்பைகளை, தங்களது வீட்டிற்கு வெளியே, தெருக்கள், திறந்த பொது வெளியில், சாக்கடைகள் மற்றும் நீர்நிலைகளில் போடவோ, பள்ளங்களில் புதைக்கவோ அல்லது திறந்த வெளியில் எரிக்கவோ கூடாது.
 
வீட்டு பயன்படுத்தும் ஆபத்தான கழிவுகள்
  • தேவையற்ற பெயிண்ட் டிரம்கள்
  • பூச்சிக்கொல்லி மருந்து கேன்கள்
  • சி.எப்.எல் பல்புகள்
  • குழல் விளக்குகள்
  • காலாவதியான மருந்துகள்
  • உடைந்த பாதரச வெப்பநிலைமானிகள்
  • பயன்படுத்திய மின்கலன்கள்
  • பயன்படுத்திய ஊசிகள்
  • சிரிஞ்சுகள்
உலகளவில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் உருவாக்கும் கழிவுகளின் அளவு:
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் - 2.58 kg
  • ஜெர்மனி - 1.68 kg
  • சீனா - 0.63 kg
  • இந்தியா - 0.45 kg
  • கென்யா - 0.30 kg
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாடு மற்றும் கழிவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தபோது, 1.3 பில்லியன் டன் கழிவுகள் தேங்கிக் கிடக்கும் என்ற அளவை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
 
இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு 0.45 கிலோ கிராம். இது ஒப்பிட்டுப் பார்க்கையில் குறைந்த அளவாக இருப்பினும், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்திய நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட மொத்த கழிவுகளைக் கணக்கில் கொண்டால், அவற்றை அதிக வண்டிகளில் ஏற்ற வேண்டும். வண்டிகள் வரிசையாக நிற்கும் தூரத்தைக் கணக்கிட்டால், அது 2800 கிலோ மீட்டரைத் தாண்டி இருக்கும். இது கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை உள்ள தூரத்தைக் குறிக்கும். (நடப்பதற்குக் கூட இடமிருக்காது இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்). எனவே முடிந்த வரை கழிவுகளைக் குறைத்தல் மிகவும் அவசியம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக்கழிவுகள் உருவாகிறது.
 
Important!
கழிவுகளை மூன்று பிரிவுகளாக எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க முடியும்.