PDF chapter test TRY NOW
மாசுபாடு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில் வெளியிடப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இத்தகைய பொருள்கள் சுற்றுச்சூழலின் தன்மையே மாறிவிடுகிறது.
மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால் சுற்றுச்சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும் அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். எந்த வேதிப்பொருள்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகிறதோ அவை மாசுபடுத்திகள் எனப்படும்.
மாசுபாடு நான்கு முக்கிய வகைகள், அவை:
- காற்று மாசுபாடு
- நீர் மாசுபாடு
- நில மாசுபாடு
- ஒலி மாசுபாடு
காற்று மாசுபாடு (Air Pollution)
நாம் சுவாசிக்கும் காற்று நிலத்துக்கு அடியிலிருந்து கிடைக்கும் எண்ணெய், பெட்ரோல், நிலக்கரி (தொல்லுயிர் படிம எரிபொருள்கள்) போன்ற எரிபொருள்களை எரிப்பதாலும் மற்றும் இயற்கை வாயுக்களாலும் மாசுப்படுகிறது. மேலும் இவை தொழிற்சாலை, மின் நிலையம் மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் தயாரிப்பில் தொல்லுயிர் படிம எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
காற்று மாசுபாடு
எரிபொருள்களை எரிப்பதால் உருவாகும் வாயுக்களும், இதிலிருந்து வெளியே வரக்கூடிய புகை அதில் காணப்படும் மிக சிறியத் துகள்களான சாம்பலும், தூசிகளும் காற்றில் சேர்வதாலும், நெகிழி போன்ற திடகழிவுப்பொருள்களை திறந்த வெளியில் எரிப்பதாலும், பெயிண்ட் மற்றும் வாசனைத் தைலங்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நீராவி காற்றில் கலப்பதாலும் காற்று மேலும் மாசுப்படுகிறது.
புகை
அமில மழை
அமில மழைக்கான முதன்மையான காரணங்கள் மனிதச் செயல்பாடுகள் மூலம் நடைபெறும் மின் உற்பத்தி, தானியங்கி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் சில நச்சுவாயுக்களான சல்பர் - டை - ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நீர், ஆக்சிஜன் மற்றும் காற்றில் உள்ள மற்ற வாயுக்களுடன் கலக்கும்போது நிச்சயமாக ஒரு வேதிவினை நிகழும். அந்த வேதி மாற்றம் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாறி மழையாகப் பொழிகிறது. இதற்கு அமில மழை என்று பெயர்.
அமில மழை
அமில மழையின் விளைவுகள்:
- அமில மழையால் தாவரங்கள், மண், மரங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- மரங்களில் உள்ள இலைகளை பட்டுப்போகச் செய்து மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிய காரணமாக உள்ளது.
- இந்த மழை, ஏரிகளிலும், குளங்களிலும் கலப்பதால் அதில் வாழும் மீன்கள் மற்ற விலங்குகள் இறப்பை ஏற்படுத்துகிறது.
- கட்டிடங்களின் பளபளப்புத் தன்மை நிச்சயம் பாதிக்கபடுகிறது.
- காற்று மாசுபாட்டை ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும் போது, மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பை உண்டாகும்.
- மனிதர்களுக்கு மாசடைந்த காற்று மூலம் தோல், கண்கள் மற்றும் நுரையீரல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காற்று மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைப்பது?
- அருகில் உள்ள கடைகள் மற்றும் பிற இடங்களுக்கு போக, மோட்டார் வாகனங்களில் போகாமல், நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ போகலாம்.
- நீண்ட பயணம் போக பேருந்துகளையும், தொடர் வண்டிகளையும் பயன்படுத்தலாம்.
- திடக்கழிவுகளை திறந்த வெளியில் எரிப்பதை தவிர்க்கலாம்.
- பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
- தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.