PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனித செயல்பாடுகள் காரணமாக தொழிற்சாலை, வீடு, வயல்வெளி ஆகிய இடங்களிலிருந்து வெளிவரும் அனைத்து கழிவுகளும் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல் நீர் போன்றவற்றில் கலக்கும்போது நீர் மாசுபடுகிறது. இதுவே நீர் மாசுபாடு என அழைக்கப்படுகிறது.
மனிதன் மாசு கலந்த நீரை பயன்படுத்தும் போது அதிலுள்ள வேதிப்பொருள்கள் உடல் நலத்துக்கு தீங்கை ஏற்படுத்துகிறது மற்றும் நோய்களைப் பரப்புகின்றது.
 
நீரை மாசுறச் செய்யும் பொருள்கள்:
 
1. வீட்டில் பாத்திரம் சுத்தப்படுத்த, குடிநீர் சுத்திகரிக்க, துணிகளை சுத்தப்படுத்த, குளிக்க ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடைக் கழிவுகளாக மாறி நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது.
 
2. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளில் எண்ணெய், கழிவு நீர், கதிரியக்கப் பொருள்கள் போன்றவை காணப்படும் இவை நீர் நிலைகளில் கலக்கும் போது நீரை மாசடைய செய்கிறது.
 
3. விவசாயக் கழிவுகளான பூச்சிக் கொல்லிகள் (Pesticides), உரங்கள் ஆகியவை வயலிலிருந்து அடித்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது.
 
4. திடக்கழிவுகளை ஆறு மற்றும் கடலில் கலக்கப்படுகிறது.
 
shutterstock_2124715256 (1).jpg
திடக்கழிவு மேலாண்மை
 
நீர் மாசுபாட்டை எவ்வாறு குறைப்பது:
 
1. பயன்படுத்திய எண்ணெய் மற்றும் பழைய மருந்துகள் ஆகியவை நீர் நிலைகளில் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
2. வயலில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் செயற்கை உரங்கள் ஆகியவை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.
3. வீட்டுகளில் பயன்படுத்தி வெளியேறும் கழிவுநீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்த வேண்டும்.
4. திடக்கழிவுகளை குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும் மேலும் அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
5. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மூலம் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.