PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களிருந்து தேவையில்லை என வெளியே போடும் பொருள்களை கழிவுப்பொருள் என அழைக்கப்படும்.
ஒரு சூழ்நிலை மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இதை எவ்வாறு குறைக்க வேண்டும் அல்லது சரியான வகையில் இவற்றைக் கையாண்டு மறுசுழற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உருவாக்கும் எல்லாம் கழிவுகளும் சூழ்நிலை மண்டலத்தைப் பாதிக்கும்.
வெளியேறும் கழிவுகள் அனைத்தும் என்ன செய்யப்படுகிறது எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை.
மனிதன் பயன்படுத்திய கழிவுகளில் பல்வேறு வகையான கழிவுகள் காணப்படுகிறது. அவை
- திடக்கழிவுகள் (குப்பைத்தொட்டியில் காணப்படும் கழிவுகள்)
- திரவக்கழிவுகள் (சாக்கடைக் கழிவுகள்)
- வாயுக்கழிவுகள் (தொழிற்சாலை மாசுபாடுகள்)
திடக்கழிவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். அவை
- உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்)
- உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்)
1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்):
மட்கும் கழிவுகள் என்பது இயற்கை கூறுகளான நீர், ஆக்சிஜன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் செயற்பாட்டினால் சிதைவடையக் கூடிய கழிவுப் பொருள்களைக் குறிக்கும்.
Example:
காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் (புற்கள், இலைகள், களைகள் மற்றும் சிறு கிளைகள்), மனிதக் கழிவுகள் மற்றும் விலங்கினக் கழிவுகள்.
நாம் மண்ணில் போடும் வாழைப்பழத் தோல்கள், இலைத்தழைகள் ஆகியவற்றை பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சிறு பூச்சிகளின் செயல்பாடுகளால் அதை அழித்து மண்ணுக்கு உரமாக மாற்றுகிறது.
மட்கும் கழிவுகள்
உயிரிச் சிதைவுறு கழிவுகளை இயற்கைக் கூறுகளான ஆக்சிஜன், நீர், ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் செயல்பாடால் கடினமான கரிமப் பொருள்களை எளிமையான மூலக்கூறுகளாக மாற்றி மட்குதலுக்கு உதவி செய்கிறது. இவ்வாறு உயிரினச் சிதைவிற்கு உட்படும் பொருள்களை எளிய தாதுப் பொருள்களாகவும், ஆற்றல் உள்ள பொருள்களாக உருவாகி மண்ணுக்கு உரமாக மண்ணை மேலும் வளப்படுத்துகிறது.
2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்):
மட்காத கழிவுகள் என்பது நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிமையான மூலக்கூறுகளாக மாற்ற முடியாத பொருள்களாகும்.
Example:
நெகிழிப்பொருள்கள், உலோகங்கள், அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள்.
மட்காத கழிவுகள் இயற்கை நடைமுறைகளில் அழியாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அப்படியே மண்ணில் இருக்கிறது.
நெகிழி
1. விலங்குகளின் எலும்புகள் உயிரினச் சிதைவுறுபவையா?
விலங்குகளின் எலும்புகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு ஆகும்.
2. எல்லா வகையான துணிகளும் உயிரினச் சிதைவுறுபவையா?
எல்லா வகையான துணிகளும் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவு ஆகும்.