PDF chapter test TRY NOW
சூழ்நிலை மண்டலத்தில் உற்பத்தியாளர்களிலிருந்து நுகர்வோர்களுக்கு ஆற்றலானது அனுப்பப்படுகிறது. ஒரு உணவுச்சங்கிலியில் பல்வேறு வகையான நுகர்வோர்கள் காணப்படுகிறது.
முதல்நிலை நுகர்வோர்கள் என்பது தாவரங்களை உணவாக உண்ணும் விலங்குகள் ஆகும்.
Example:
வெட்டுக்கிளி, எலி, முயல், மான், ஆடு, மாடு, யானை
இரண்டாம் நிலை நுகர்வோர்கள் என்பது முதல்நிலை நுகர்வோர்களை உணவாக உண்ணும் விலங்குகள் ஆகும்.
Example:
தவளை, காட்டு பூனை, நரி, ஆந்தை
மூன்றாம் நிலை நுகர்வோர்கள் என்பது இரண்டாம் நிலை நுகர்வோர்களை உணவாக உண்ணும் விலங்குகள் (பொதுவாக வேட்டையாடி உண்ணும் விலங்குகள்) எனப்படுகின்றன.
Example:
பாம்பு, சிறுத்தை.
நான்காம் நிலை நுகர்வோர்கள் என்பது சில சூழ்நிலை மண்டலங்களில் மூன்றாம் நிலை நுகர்வோர்களை உணவாக வேட்டையாடி உண்ணும் பெரிய விலங்குகள் ஆகும்.
Example:
கழுகு, சிங்கம், புலி
பல்வேறு வகையான நுகர்வோர்கள்
உணவூட்ட நிலைகள்
உணவு சங்கிலியில் உள்ள படிநிலைகளில் ஒவ்வொரு உணவூட்ட நிலையிலிருந்து அடுத்த உணவூட்ட நிலைக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது. இதுவே உணவூட்ட நிலைகள் என அழைக்கப்படுகிறது.
உயிரினங்கள் சூழ்நிலை மண்டலத்தினைப் பொறுத்து உணவூட்ட நிலைகள் எண்ணிக்கை மாறுபடலாம். உயிரினங்கள் உண்ணும் உணவிலிருந்து பெறும் ஆற்றலின் பெரும் பாகத்தை தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், மீதி உள்ள ஆற்றலை தன் உடலில் புதிய செல்கள் உருவாக்க பயன்படுத்துகிறது. ஒரு உயிரினம் பிற உயிரினத்திற்கு உணவாகும் போது சிறிய பகுதி ஆற்றலே அந்த உயிரினத்திற்குக் கிடைக்கும்.
ஒவ்வொரு உணவூட்ட நிலையிலிருந்து அடுத்த உணவூட்ட நிலைக்கு ஆற்றல் கடத்தப்படும் பொழுது ஆற்றல் அளவு குறைகிறது. இதனால் உணவு சங்கிலியின் மேல் மட்டத்தில் இருக்கும் உயிரினங்களுக்கு குறைவான ஆற்றலே கிடைக்கிறது. இந்த ஆற்றல் இழப்பை நாம் ஆற்றல் பிரமிடு மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆற்றல் பிரமிடு
எலி தானியங்களை உணவாக உண்ணுகிறது. பாம்பு எலியை உணவாக உண்ணும். பாம்பு மயிலுக்கு உணவாக மாறுகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. சிறுத்தைகளுக்கு அல்லது புலிகளுக்கு மயில்கள் உண்ணும் உணவாகிறது. புலிகளை வேட்டையாடி உணவாக உண்ணும் விலங்குகள் இயற்கையில் வேறு ஏதாவது உள்ளதா, இல்லை.
ஒவ்வொரு உணவுச்சங்கிலியிலும் மற்ற விலங்குகளால் வேட்டையாட முடியாத உயர் மட்ட வேட்டையாடும் விலங்குகள் இருக்கிறது. நீர்ச் சூழ்நிலை மண்டலத்தில் முதலைகளையும், நிலவாழ் சூழ்நிலை மண்டலத்தில் புலிகளையும் வேட்டையாடி உணவாக உண்ண இயற்கையில் வேட்டையாடும் விலங்குகள் இல்லை.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவம்
1. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கிடையே உள்ள உணவு உணவூட்ட நிலையும், அந்த உயிரினங்கள் எவ்வாறு பிற உயிரினங்களை உணவுக்காக ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
2. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் எந்த முறையில் ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு ஆற்றல் ஒரு வட்டப்பாதையில் அனுப்பப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது மிகவும் தேவையான ஒன்றாகும். சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படும் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஒரு உயிரினத்திடமிருந்த வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றின் தன்மை மற்ற உயிரினங்களுக்கு எவ்வாறு தொடர்ச்சியாக அனுப்பப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள உணவுச் சங்கிலி பயன்படுகிறது.
உணவு வலை
ஒரு சூழ்நிலை மண்டலத்தின் அனைத்து உணவுச்சங்கிலிகளையும் ஒன்று சேர்த்து, மாறுபட்ட பிணைப்புகளைப் பெற்ற ஒரு சுழற்சியானா அமைப்பை கொண்டிருக்கும். இதை உணவு வலை என்று அழைக்கப்படும்.
ஒரு சூழ்நிலை மண்டலத்தில் நுகர்வோர்களுக்கு தேவையான உணவுகள் பல வகையில் பெறுகின்றன. அவை உணவிற்காக ஒரே உயிரினத்தைச் சார்ந்து வாழ்வதில்லை. ஒரு சூழ்நிலை மண்டலத்தின் மாறுபட்ட உயிரினங்களுக்கிடையேயான, பல்வேறு வகையான உணவூட்ட முறைகளை பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு உணவு வலை பயன்படுகிறது.
உணவு வலை