PDF chapter test TRY NOW

பூமியில் உயிரினங்கள் வாழ நீர், காற்று எவ்வாறு முக்கியமோ அதேபோல் உணவும் முக்கியமாகும். அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுகின்றன. சில உயிரினங்கள் தங்களுக்கு தேவையான உணவைத் தானே சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்து கொள்கின்றன எடுத்துக்காட்டாக, தாவரங்களைக் கூறலாம். ஆனால் சில உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான உணவிற்காக பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்கின்றன.
 
ஒரு சூழ்நிலை மண்டலத்தில் வாழும் உயிரினங்கள் பல வகையான முறைகளில் உணவுகளை எடுத்துக் கொள்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியும். அதாவது உயிரினங்கள் எவ்வாறு உணவை எடுத்துக் கொள்கின்றன என்பதன் அடிப்படையில் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
 
I. உற்பத்தியாளர்கள்
 
பொதுவாக தாவரங்கள் அனைத்தும் தனக்குத் தேவையான உணவைத் தானேத் தயாரித்துக் கொள்கின்றன. இதனை நாம் உற்பத்தியாளர்கள் என்கிறோம். இவை தங்களின் உணவுத் தேவைக்காக பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்வதில்லை. இவைகளை நாம் தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்றும் அழைக்கிறோம்.
Example:
தாவரங்கள்
தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்யக் கூடிய என்னென்ன உயிரினங்களை நீ பார்த்திருக்கிறாய்?
 
ஆம் பார்த்திருக்கேன், தாவரங்கள் மனிதர்களை போல சமையலறையில் பொருட்களை வைத்து சமைப்பதில்லை அல்லது உணவு விடுதிக்கு சென்று அவை உணவுட்கொள்ளுவதில்லை மாறாக, அவை தங்களுடைய உணவினை ஒளிச்சேர்க்கையின் மூலம் தானே தயாரித்துக் கொள்கின்றன.
 
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு என்னென்ன தேவைப்படுகிறது?
 
ஒளிச்சேர்க்கை என்னும் சொல்லின் "ஒளி" என்பது ஒளியையும், "சேர்க்கை" என்பது தயாரித்தல் என்பதையும் குறிக்கின்றன. இச்சொல் அளிக்கும் பொருளிலிருந்தே தாவரங்கள் எவ்வாறு ஒளியை பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். 
ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளி, நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி சர்க்கரை வடிவில் ஆக்சிஜன் மற்றும் தேவையான ஆற்றலை உருவாகும் செயல்முறையாகும். ஒளிச்சேர்க்கை நடைபெற தாவரங்களில் உள்ள பச்சை நிறமியான  பசுங்கணிகம் தான் முக்கிய காரணமாகும்.
YCIND300520223817Plantphysiology1.png
ஒளிச்சேர்க்கை
  
II. நுகர்வோர்கள்
 
உயிரினங்கள் அனைத்தும் தானே உணவைத் தயாரித்துக் கொள்ள முடியாது சில உயிரினங்கள் உயிர் வாழ பிற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. இத்தகைய உயிரினங்களை நாம் நுகர்வோர்கள் என்கிறோம்.
 
நுகர்வோர்கள் பிறசார்பு ஊட்ட உயிரிகள் என்றும் அழைக்கிறோம். விலங்குகள் உணவை எத்தனை வகைகளாக உட்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் நாம் அவற்றைப் பிரிக்கலாம். அவையாவன:
 
1. தாவர உண்ணிகள்
 
சில விலங்குகள் தாவரங்கள் மற்றும் தாவரப் பொருள்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்கின்றன அவை தாவர உண்ணிகள் என அழைக்கப்படும்.
Example:
பசு, மான், ஆடு மற்றும் எலி
animalworld44008091280jpg.jpg
ஆடு
  
2. ஊன் உண்ணிகள்
 
சில விலங்குகள் உணவாக பிற விலங்குகளை உட்கொண்டு வாழ்கின்றன. இவை ஊன் உண்ணிகள் என அழைக்கப்படும்.
Example:
சிங்கம், புலி, தவளை மற்றும் ஆந்தை
lion14900311280jpg.jpg
சிங்கம்
 
3. அனைத்துண்ணிகள்
 
சில உயிரினங்கள் உணவாக தாவரங்களையும், விலங்குகளையும் உட்கொண்டு வாழ்கின்றன. இவை அனைத்துண்ணிகள் என அழைக்கப்படும்.
Example:
மனிதன் மற்றும் காகம்
raven50055341280jpg.jpg
காகம்
  
4. சிதைப்பவைகள்
 
சில உயிரினங்கள் (நுண்ணுயிரிகள்) அழிந்துப் போன விலங்குகள் மற்றும் தாவரங்களை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. இவை சிதைப்பவைகள் என அழைக்கப்படும். மேலும்,  நுண்ணுயிரிகள் அழிந்து போன தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள கடினமான கரிமப்பொருள்களை எளிமையான மூலக்கூறுகளாக மாற்றி அதை எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துகளாக மாற்றுகிறது.
Example:
பாக்டீரியாக்கள், பூஞ்சைகள்
mushrooms5483601280jpg.jpg
பூஞ்சை