PDF chapter test TRY NOW
அறிமுகம்
மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம் தான் இந்த புவி மண்டலமாகும்.
உயிரினங்கள் வாழும் இடம் மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்பு ஆகியவற்றைத் தான், நாம் சுற்றுச்சூழல் என்கிறோம்.
சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும் குறிப்பது ஆகும்.
உயிரற்ற காரணிகள்
- சூரியன்
- காற்று
- நீர்
- ஆகாயம்
- மண்
- தாதுப்பொருள்கள்
உயிருள்ள காரணிகள்
- தாவரங்கள்
- விலங்குகள்
- நுண்ணுயிரிகள்
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன மற்றும் சூழலைப் பொறுத்து தங்களை மாற்றிக்கொள்கின்றன.
சூழ்நிலை மண்டலம்
சூழ்நிலை மண்டலம் என்பது ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள், அங்கே காணப்படக்கூடிய உயிரற்ற காரணிகளுடன் இணைந்து வாழ்தல் எனலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் ஆகிய இரண்டும் இணைந்து வாழும் ஒரு கட்டமைப்பு ஆகும்.
சூழ்நிலை மண்டலத்தில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் / இடத்திற்கும் ஒவ்வொரு பணி உள்ளது. சுற்றுச் சூழலில் காணப்படும் காலநிலை மாற்றத்தால் சூழ்நிலை மண்டலத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது.
சூழ்நிலை மண்டலத்தின் வகைகள்
சூழ்நிலை மண்டலம் என்பது இயற்கை சூழ்நிலை மண்டலம், செயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகிய இரண்டு வகைகளில் செயல்படுகிறது.
1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
இயற்கை சூழ்நிலை மண்டலம் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் எதுவுமின்றி இயற்கையான முறையில் உருவான சூழ்நிலை மண்டலம் ஆகும். இது நீர்வாழ் சூழ்நிலை மண்டலம், நிலவாழ் சூழ்நிலை மண்டலம் என இருவகைகளில் காணப்படும்.
i. நிலவாழ் சூழ்நிலை மண்டலம்
நீருக்கு வெளியில் உள்ள நிலப்பகுதியில் உருவான சூழ்நிலை மண்டலம் நிலவாழ் சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
Example:
காடுகள், மலைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடலோரப் பகுதிகள்.
காடு
ii. நீர்வாழ் சூழ்நிலை மண்டலம்
நீரில் உருவான சூழ்நிலை மண்டலம் நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
Example:
ஏரி, ஆறு, குளம், குட்டை மற்றும் கடல்.
நீர் வாழிடங்கள்
2. செயற்கை சூழ்நிலை மண்டலம்
மனிதர்களின் தலையீட்டால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை இயற்கை சூழ்நிலை மண்டலங்களின் சில பண்புகளை ஒத்துக் காணப்படும். இதுவே செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் எனப்படும். இருப்பினும், இவை இயற்கை சூழ்நிலை மண்டலங்களை விட மிக சிறியவை ஆகும். மேலும் இது நீர்வாழ் சூழ்நிலை மண்டலம், நிலவாழ் சூழ்நிலை மண்டலம் என இருவகைகளில் காணப்படும்.
- நிலவாழ் சூழ்நிலை மண்டலம் - எ.கா: நெல் வயல்கள், தோட்டம்.
- நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் - எ.கா: மீன் வளர்ப்பு தொட்டி.
தோட்டம், மீன் வளர்ப்பு தொட்டி
Important!
நீர்வாழ் காட்சியகம் (Aquarium) என்பது நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் இடம் ஆகும். மேலும் இங்கு மீன்கள், பிற நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை பராமரிக்கப்படுகிறது. இது ஒரு கட்டிடமாக, ஒரு சிறிய தொட்டியாக அல்லது பல பெரிய தொட்டியாக இருக்கலாம்.
நிலவாழ் காட்சியகம் (Terrarium) என்பது நிலவாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களைக் பாதுகாக்கும் இடம் அல்லது நிலவாழ் காட்சியகம் (Terrarium) ஆகும். இதன் அமைப்பு இயற்கையான சூழ்நிலை மண்டலத்தினைப் போல காட்சியளிக்கும் மேலும் இங்கு விலங்குகளும், தாவரங்களும் பாதுகாக்கப்பட்ட சூழலில் வாழத்தப்படுகிறது. நீர்வாழ் காட்சியகம் மற்றும் நில வாழ்காட்சியகம் ஆகியவை விலங்குகளையும், தாவரங்களையும் காண்காணிக்க பயன்படுகிறது அலங்காரத்திற்காகவும் இவை உதவுகிறது.
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்
இரண்டு வகை கூறுகள் காணப்படுகிறது, அவை:
1. உயிரினக் கூறுகள்
சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு உயிரினங்களும் தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. இதில் அனைத்து உயிரினங்களும் அடங்கியுள்ளது.
Example:
தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள்.
2. உயிரற்ற கூறுகள்
அனைத்து உயிரினங்களும் தாங்கள் உயிர்வாழ்வதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிரற்ற காரணிகளில் சார்ந்திருக்கின்றன.
i. இயற்பியல் காரணிகள்
ஒளி, வெப்பம், காற்று மற்றும் காற்றின் ஈரப்பதம்.
ii. மண் சார்ந்த காரணிகள்
மண்ணிலுள்ள நீர், மண்ணிலுள்ள காற்று மற்றும் மண்ணிலுள்ள பொருள்கள்.