PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo4. ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள்
ரப்பர் மரத்திலிருந்து கிடைக்க பெறும் பாலில் இருந்து ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள் உற்பத்திச் செய்யப்படுகிறது. இவ்வாறு தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை நெகிழிகள் மக்கும் தன்மை கொண்டது. இது சுற்றுச்சூழலை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ரப்பரில் இருந்து வாகனச்சக்கரங்கள், மின்கம்பிகள், இருக்கைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
ரப்பர் மரம்
5. வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியா
நம் இந்திய விஞ்ஞானிகள் வேப்ப எண்ணெய்யால் பூசப்பட்ட யூரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த யூரியாவை நமது விவசாயிகள் பயிரின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை பெருக்கவதற்க்கவும் உரமாகப் பயன்படுத்துகின்றன. இதிலிருந்து நைட்ரஜன் மெதுவாக வெளி வருவதால் பயிர்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக்கொண்டு உற்பத்தியைப் பெருக்குகிறது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கிறது.
யூரியா
பாலக்கீரையின் பயன்பாடு
மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் ஏற்படும் ஒரு நோயாகும். இது நம் உடலில் மூட்டு மற்றும் முழங்கால் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த நோய்க்கான மருந்தை பாலக்கீரையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் (CDRI - Central Drug Research Institute) நானோ தொழில் நுட்பத்தின் (Nano formulation) வழியாக உருவாக்கியுள்ளனர். இது உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ளது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Jatropha_Crude_Oil_-_DRDO_-_Pride_of_India_-_Exhibition_-_100th_Indian_Science_Congress_-_Kolkata_2013-01-03_2580.JPG/512px-Jatropha_Crude_Oil_-_DRDO_-_Pride_of_India_-_Exhibition_-_100th_Indian_Science_Congress_-_Kolkata_2013-01-03_2580.JPG
https://www.flickr.com/photos/47108884@N07/4324521371
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/Sugarcane_bagasse.jpg/512px-Sugarcane_bagasse.jpghttps://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Rubber_tree_up_%282657925156%29.jpg/512px-Rubber_tree_up_%282657925156%29.jpg