
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. மண் வளத்தைப் பாதுகாத்தல்
இயற்கையாகவே தாவரங்கள் மண் வளத்தை அதிகரிக்க செய்கிறது. அதாவது தாவரங்களில் உள்ள இலைகள், மலர்கள் மற்றும் பிற பாகங்கள் காய்ந்து மண்ணில் விழுகிறது. இவை மண்ணில் அழிந்து வளமான இயற்கை உரத்தை மண்ணுக்கு அளிக்கிறது. இந்த இயற்கை (மட்கிய) உரமானது மண்ணுக்கு வளத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. மேலும் நீலப் பச்சைப்பாசி, பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவை வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தச் செய்து மண் வளத்தை அதிகரித்து விவசாய உற்பத்திக்கு பயன்படுகிறது.

சயனோபாக்டீரியா
2. மண் அரிப்பைத் தடுத்தல்
நிலத்தின் மேற்பரப்பில் அதிவேகமாக காற்று வீசும் போது, வேகமாக நீர் பாயும் போது, அதிக மழை பொழிவின் போது, வெள்ளம் ஏற்படும் போது போன்ற பல காரணங்களால் வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. இயற்கையிலே தாவரங்கள் அடர்த்தியாக வளர்கிறது மற்றும் அவற்றின் வேர்கள் மூலம் மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. மண் அரிப்பு ஏற்படும் இடங்களில் தாவரங்களை வளர்க்கபடும் போது இயற்கையிலே மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.

மண் அரிப்பு தடுப்பு
3. உயிரி – எரிபொருள்
சில தாவரங்களை உயிரி எரிபொருள் தேவைக்காக வளர்க்கப்படுகிறது. இந்த வகையான எரிபொருள்கள் மிகக் குறைந்த அளவே நச்சுச்தன்மை கொண்ட வாயுக்களை வெளியேறுகிறது. இதில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் உருவாக்குவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்படுகிறது. மேலும் தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு தற்போது பல்வேறு நாடுகளிலும் முன்னுரிமை தரப்படுகிறது. தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பது தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமானதாக உள்ளது.
Example:
காட்டாமணக்கு தாவரத்திலிருந்து கிடைக்கும் விதைகளிருந்து உயிர் எரிபொருள் (பயோடீசல் )தயாரிக்கப்படுகிறது. பயோடீசல் ஒரு சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். இது மிகவும் பொதுவாகவும் வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் எளிமை மற்றும் செயல்திறன் காரணமாகும்.

காட்டாமணக்கு (பயோடீசல் )
Example:
சர்க்கரை ஆலை கழிவுகளிலிருந்தது அதாவது கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்படுகிறது.

கரும்பு சக்கை
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:WisconsinScenery.jpg
https://www.flickr.com/photos/argonne/5909383026
https://www.flickr.com/photos/timmeko/6106058553