PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

சில மருத்துவத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. தாவரப் பெயர்: நெல்லி 

பயன்படும் பாகம்: கனி 

மருத்துவப்பயன்கள்: வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாக, நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்த பயன்படுகிறது. 

 

2. தாவரப் பெயர்: துளசி

பயன்படும் பாகம்: இலை, விதை  

மருத்துவப்பயன்கள்: இருமல், சளி, மார்புச் சளி மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியைக் குணப்படுத்த பயன்படுகிறது.
 

3. தாவரப் பெயர்: சோற்றுக் கற்றாழை 

பயன்படும் பாகம்: சதைப்பற்றுள்ள இலைகள்  

மருத்துவப்பயன்கள்: மலமிளக்கியாக, காயத்தைக் குணப்படுத்த, தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த பயன்படுகிறது.
 

4. தாவரப் பெயர்: வேம்பு 

பயன்படும் பாகம்: மரப்பட்டை, இலை மற்றும் விதைகள்
மருத்துவப்பயன்கள்: கிருமி நாசினியாக, தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

 

5. தாவரப் பெயர்: மஞ்சள்

பயன்படும் பாகம்: தரை கீழ் தண்டு

மருத்துவப்பயன்கள்: கிருமி நாசினி, சிறிய காயம்பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க பயன்படுகிறது.

 

BeFunkycollage10.png

மருத்துவத் தாவரங்கள்