PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நறுமணத் தாவரங்கள்
வெப்பமண்டல சுற்றுச்சூழலில் வாழும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் நறுமணப் பொருள்கள் நாம் உண்ணும் உணவிற்கு நறுமணத்தை கொடுக்க பயன்படுகிறது. நறுமணத் தாவரங்களிலிருந்து பெறப்படும் மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் அல்லது தண்டுகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நறுமணப் பொருள்கள் உண்ணும் உணவிற்கு சுவை, நிறம், உணவுப் பொருள்களைப் பாதுகாக்க தேவைப்படுகிறது.
 
இந்திய நறுமணப் பொருள்கள்
 
இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் கி.மு. \(2000\) முதல் நறுமணப் பொருள்கள் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. இதற்கு உதாரணமாக இராமாயணத்தில் கிராம்பும், இலவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
இந்தியாவில் நறுமணப் பொருள்கள் பல வகை உணவுகளில் பல காரணங்களுக்காகப் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுகிறது. இவை முழுமையாகவோ, பொடியாகவோ, வறுத்ததாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுகிறது.
Example:
ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, சீரகம், கொத்தமல்லி விதைகள், மஞ்சள், கிராம்பு, இஞ்சி, சாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை
1024pxGingerbreadspicesw877.jpg
இந்திய நறுமணப் பொருள்கள்
 
Important!
உலக உணவு தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. இது, ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு இத்தினத்தினைக் கொண்டாடுகிறது. \(2022\) ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் பசியோடு யாரையும் விட்டுவிடாதீர்கள் என்பதாகும். பசி, பட்டினியால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்ள இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத் தாவரங்கள்
நாம் வாழும் சுற்றுச்சூழலில் காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது உடலில் உள்ள நோய்களை சரி செய்யப் பயன்படுகின்றன. இவை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கப்படும் .
இந்தியாவில் தற்போது \(8000\) மருத்துவ தாவர இனங்கள் உள்ளன என்று இந்திய தாவரவியல் ஆய்வகம் (பிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. மனித உடலில் தோன்றும் பல நோய்களான புண், வெட்டுக் காயம், சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளை குணப்படுத்த மருத்துவத் தாவரங்கள் பயன்படுகின்றன.
 
இதில் சில வேதி கூட்டுப் பொருள்கள் சில வகையான மருத்துவத் தாவரங்களில் உள்ளன இவை பூச்சிகள், பூஞ்சைகள் மற்றும் சில நோய்க்கிருமிகளிடமிருந்து எதிராக செயல்பட்டு உடலை பாதுகாக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் மருத்துவத் தாவரங்களில் உள்ளதால் இவை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Gingerbread_spices.jpg/1024px-Gingerbread_spices.jpg