PDF chapter test TRY NOW
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக?
நமக்கு தேவையான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து கிடைக்கிறது. இதுவே மரக்கட்டை தரும் தாவரங்கள் என அழைக்கப்படும். இவை , மரப்பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மரக்கட்டை என்பவை தாவரத்தின் காய்ந்த தண்டுப் பகுதியாகும்.
மரக்கட்டைகளின் பண்புகள்:
• கடினத்தன்மை
• நீடித்து உழைக்கும்
• அழகு
• வெப்பத்தினைத் தாங்கும் திறன்
• குறைந்த ஈரப்பதம்
• வலிமை
• பயன்பாட்டிற்கு ஏற்ப அமைப்பு
1. வன்கட்டைகள்
பூக்கும் தாவரங்கள் என்று அழைக்கப்படும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர வகைகளிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன. இதிலிருந்து உயர்தர மரச்சாமான்கள், , மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு: தேக்கு, .
2. மென்கட்டைகள்
பூவாத்தாவரங்கள் என்று அழைக்கப்படும் ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து மென்கட்டைகள் பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களிலிருந்து மென்கட்டைகள் கிடைக்கின்றன. இதிலிருந்து பொதுவாக ஒட்டுப்பலகைகள் மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் ற்பத்திக்கு பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு: கடம்பு, .