
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
i. பூக்கும் தாவரங்கள் என்று அழைக்கப்படும் தாவர வகைகளிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன. இதிலிருந்து உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு: , பலா.
ii. பூவாத்தாவரங்கள் என்று அழைக்கப்படும் வகை தாவரங்களில் இருந்து மென்கட்டைகள் பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களிலிருந்து மென்கட்டைகள் கிடைக்கின்றன. இதிலிருந்து பொதுவாக ஒட்டுப்பலகைகள் மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (காகிதம்) உற்பத்திக்கு பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு: , பைன்
2. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
வெப்பமண்டல சுற்றுச்சூழலில் வாழும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் நறுமணப் பொருள்கள் நாம் உண்ணும் உணவிற்கு நறுமணத்தை கொடுக்க பயன்படுகிறது. நறுமணத் தாவரங்களிலிருந்து பெறப்படும் மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் அல்லது தண்டுகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நறுமணப் பொருள்கள் உண்ணும் உணவிற்கு , , உணவுப் பொருள்களைப் பாதுகாக்க தேவைப்படுகிறது.